இரண்டு மாநில ஆளுநராக இருந்து தேர்தல் களத்தில் மீண்டும் களம் இறங்கியுள்ள தமிழிசை தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளள நிலையில், அதில் அவருடைய சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
வேட்புமனு தாக்கல் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் களம் இறங்கும் பாஜக வேட்பாளரான தமிழிசையும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் பதவி கொடுத்த பாஜக தலைமை
இதனையடுத்து தமிழிசையின் சொத்து பட்டியலையும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். பாஜகவில் தீவிர செயல்பாட்டாளாராக இருந்த தமிழிசை தனது அயராத உழைப்பால் பல்வேறு பதவிகளை பெற்று பாஜகவின் மாநில தலைவராகவும் பொறுப்பேற்றார். இவர் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்தது. தமிழிசையின் தேர்தல் வசனமான சூரியன் உதிக்கிறதோ இல்லையோ..! கை ஓங்குகிறதோ இல்லையோ... பம்பரம் சுழல்கிறதோ இல்லையோ... மாம்பழம் பழுக்கிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் என்ற வசனம் பிரசித்து பெற்றது. இந்த வசனத்தால் தமிழிசை குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டார்.
தமிழிசை சொத்து மதிப்பு என்ன.?
தமிழிசையின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பாஜக தலைமை சார்பாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தது. சுமார் 4 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய தமிழிசை அரசியல் களத்தில் குதித்துள்ளார். தென் சென்னை தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அதில், தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி எனவும், சொந்த வாகனம் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலா 10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம் மற்றும் ஸ்கேன் இயந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வங்கியில் கடன் எவ்வளவு.?
மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் கணவர் பெயரில் மொத்தம் 3.92 கோடி அசையும் சொத்து உள்ளதாகவும், மகள் பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், அவரது கணவர் சௌந்தரராஜன் பெயரில் 13.70 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிசை பெயரில் 58 லட்சமும், அவரது கணவர் பெயரில் 3.35 கோடியும், மகள் பெயரில் 3.41 கோடியும் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதெல்லா இது வேறயா? ஓபிஎஸ் இனிசியலுடன் கூடிய ஓ.பன்னீர்செல்வம் போட்டி.!