நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் களம் சூடு பறந்து வரும் நிலையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் செல்வபிரபு அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக- பாஜக மோதல்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தல் குறைந்தது 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக திட்டம் வகுத்தது. இதற்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி
இதனையடுத்து அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இதனையட்டுத்து போட்டியாக பாஜகவின் மூத்த நிர்வாகியான நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார். இப்படி இரண்டு தரப்பில் உள்ள நிர்வாகிகளை போட்டி போட்டு இழுக்கும் நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கொட்ட பொறுப்பாளர் திரு செல்வபிரபு, இன்று பாஜகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
இதையும் படியுங்கள்