தேர்தலில் போட்டி என்றால் திமுகவிற்கும், பிரதான எதிர்கட்சியான அதிமுகவிற்கு இடையே தான் என்பதை நாடு அறியும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
திமுக- அதிமுக இடையே தான் போட்டி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியவர், தேர்தலில் போட்டி என்றால் திமுகவிற்கு .. பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை நாடு அறியும். திமுக தலைவர் இரண்டு கூட்டங்களில் ஒன்றில் பிரதமரை பற்றி விமர்சிப்பார், மற்றொன்று என்னை பற்றி பேசுவார். வேறு எதுவும் பேச மாட்டார். சரக்கு இருந்தால் தானே பேசுவார் அவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் எல்லாம் குடும்பியா வைத்திருக்காங்கா.?
உதயநிதி ஒரே செங்கலை எடுத்து மூன்று வருடமாக காட்டி கொண்டு உள்ளார். மேலும் Scriptaaaஐ மாற்றுப்பா - கதையை மாத்து என தெரிவித்தார். செங்கலை ரோட்டில் காட்டி என்ன பயன் என கேள்வி எழுப்பியவர், நாடாளுமன்றத்தில் காட்டுங்கள் என தெரிவித்தார். இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கேற்கனும், ஆனால் அதற்கு தில்லு திறானி தெம்பு இல்லை என கூறினார். மேலும் செங்கலை பிடித்துக்கொண்டு உதயநிதி வித்தை காட்டுகிறார். என்ன மக்கள் எல்லாம் குடுமி வைத்துள்ளார்கள் என நினைக்கிறாயா.? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள்.
அதிமுக ஆட்சி கால திட்டங்கள் என்ன.?
ஏழை எளிய மாணவர்கள் ஏன் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்று நினைத்தேன், இதற்காக 7.5 % அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள் ஒதுக்கீடு நாங்கள் கொண்டு வந்தோம். 2160 மாணவர்கள் ஏழை மானவர்கள் இன்று மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியில் ஆட்சி அதிகாரம் தேவை ஸ்டாலினுக்கு, இங்கு குடும்ப கட்சி நடத்துவது போல் அங்கும் ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிறார். எடப்பாடி மத்தியில் உள்ள அரசிடம் என்ன கொண்டு வந்தார் என கேள்வி கேட்கிறார், அதிமுக ஆட்சி காலத்தில், மெட்ரோ - நடந்தாய் வாழி காவிரி - தடுப்பனை இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்