அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்? அண்ணாமலை அமித்ஷாவிடம் கூறினாரா? அவரே சொன்ன தகவல்..!

By vinoth kumarFirst Published Mar 24, 2023, 12:11 PM IST
Highlights

ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பாஜகவுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை.

மக்களின் செல்வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என அண்ணாமலை அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நான் டெல்லி சென்று அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அமித் ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் என்றார். 

இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து திடீரென விலகிய சேலம் மாவட்ட செயலாளர்..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறியதால் அண்ணாமலை அதிர்ச்சி

தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். மக்களின் செல்வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர வேண்டும் என்பதே நோக்கம். பாஜகவுக்கு எந்த கட்சியின் மீதும் கோபம் இல்லை. கட்சியை வலுப்படுத்துவது  தமிழக மக்களின் அன்பை பெறுவது ஆளும் கட்சியாக மாறுவது என்பது தான் பாஜகவின் குறிக்கோள். கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கமான ஒன்று தான். 

இதையும் படிங்க;-  4 மாநில பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலை அண்ணாமலைக்கு ஏற்படலாம்! உருட்டு மன்னன்! போலிமலை! விளாசும் காயத்ரி.!

மேலும் கூட்டணி விவகாரங்களில் பாஜக மத்தியக் குழு தான் எந்த ஒரு முடிவும் எடுக்கும். ஆகையால் நான் கூட்டணி விவகாரங்கள் பற்றி ஏதும் பேசவில்லை. கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பாஜகவுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை.

ஏப்ரல் 14 ஊழல் பட்டியல் வெளியிடப்படும். சுற்றுப்பயண விவரம் கர்நாடக தேர்தலை பொறுத்து மாற்றப்படும். அதிமுகவினுடைய உள் கட்சி பிரச்சனை அதற்குள் நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது.  ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தி தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியிருந்தார். அது அவர்களின் நிலைப்பாடு. திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!