ஓபிஎஸ் உடன் எப்போது சந்திப்பு..? நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைவோம்- சசிகலா பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Mar 24, 2023, 11:15 AM IST
Highlights

அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பல பிளவுகளாக பிரந்துள்ளது. இதனால் தேர்தல்களில் வாக்கு சதவிகிகம் குறைந்து தோல்வி ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என சசிகலா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்டி. மூர்த்தி மகளுக்கும் திருமதி சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி சசிகலா அவரது சகோதரி இளவரசி  சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  சசிகலாவிடம், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

டிடிவி தினகரன் அணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த அமைப்புச் செயலாளர்..! உற்சாகத்தில் இபிஎஸ்

 அனைவரும் ஒன்றிணைவோம்

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், நிச்சயம் ஏற்படாது,  அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன்.  நிச்சயமாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார். தற்பொழுது அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறினார். மேலும் ஓ பன்னீர்செல்வம் தன்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆருத்ரா நிதி நிறுவன பல கோடி மோசடி..! பாஜக மாநில நிர்வாகி அதிரடியாக கைது
 

click me!