ஆருத்ரா நிதி நிறுவன பல கோடி மோசடி..! பாஜக மாநில நிர்வாகி அதிரடியாக கைது

By Ajmal KhanFirst Published Mar 24, 2023, 10:27 AM IST
Highlights

பொதுமக்களிடம்  அதிக வட்டி தருவதாக கூறி  கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில் மற்றொரு இயக்குனர்  மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி

தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 2ஆயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும்  இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாஜக நிர்வாகி ஹரிஷ் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருந்தனர். 

டிடிவி தினகரன் அணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த அமைப்புச் செயலாளர்..! உற்சாகத்தில் இபிஎஸ்

பாஜக மாநில நிர்வாகி கைது

இந்த வழக்கில் தற்போது பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் என்ற மூன்று பேரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவில் ஹரிஷ் மீது மோசடி வழக்கு இருக்கும் நிலையில் பாஜகவில் சில மாதங்களுக்கு முன்பு ஹரிஷ் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

பாஜகவில் இருந்து திடீரென விலகிய சேலம் மாவட்ட செயலாளர்..! பரபரப்பு குற்றச்சாட்டு கூறியதால் அண்ணாமலை அதிர்ச்சி

click me!