தமிழகத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆா.ராசா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்யக்கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் விதமாக மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தினை திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், திராவிட சித்தாந்தம் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்றால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒழிந்தே தீர வேண்டும். நாங்கள் 2024ல் என்ன செய்யப் போகிறோம் என்பதை தமிழ்நாடு தான் முடிவெடுக்கும். யார் பிரதமர் என்பதையும் நம்முடைய முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். ஒரு வேளை தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வந்தால் அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா இருக்காது.
15 டிராக்டர்கள்; 500 வகையான சீர்வரிசை - மகளின் திருமணத்தில் ஊரையே அசர வைத்த தொழிலதிபர்
தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழலை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உருவாக்குவோம். அதற்கு அடித்தளம் தான் இந்த கையெழுத்து இயக்கம். ஆளுநர் சட்டமன்றத்தை மதிக்க மாட்டார். மேலும் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மதசார்பின்மைக்கு எதிராக பேசுவார். இந்திய மக்களாகிய நாம் ஒரு இந்திய குடியரசை ஜனநாயக சமதர்ம மற்றும் மதசார்பற்ற நாடாக அமைத்து இருக்கின்றோம்.
கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்; நீதிமன்றம் அதிரடி
திராவிட சித்தாந்தம் ஓங்கினால் காவியை பரப்ப முடியாது, ஆகையால் ஆளுநர், பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோருடன் கூட்டடணியில் ஈடுபட்டு காவி அரசியல் செய்யும் இந்த ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.