செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா.? திராவிட மாடலை தூக்கி போட்டு மிதிக்கும் மக்கள் நீதி மய்யம்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 13, 2022, 6:22 PM IST

செத்தால் தான் சாதி சான்றிதழ் கிடைக்குமா என  மக்கள் நீதி மையம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் 


செத்தால் தான் சாதி சான்றிதழ் கிடைக்குமா என  மக்கள் நீதி மையம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் நீதி மையம்  இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின்  துணைத்தலைவர் தங்கவேலு தமிழக அரசுக்கு எதிராக காட்டமாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

Tap to resize

Latest Videos

காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேல்முருகன்.  நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர்,  பத்தாம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதி சான்றிதழ் கோரி ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதி  சான்றிதழுக்காக பலமுறை அலைத்தும் பயனில்லை, மனம் வெந்து போன வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். வேல் முருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் செயல்படும் வட்டாட்சியர் அலுவலகம் முன் 75 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொண்டா ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதே போல ஏற்கனவே பலரும் சாதி சான்றிதழ் கிடைக்காமல் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் புலம்பலும்... வெளிச்சத்திற்கு வந்த மதுரை திமுகவில் சல சலப்பும்!!

பழங்குடி மக்களின் சில பிரிவினர் சாதி சான்றிதழுக்காக வருடக் கணக்கில் போராடி வருகின்றனர். இதனால் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். பழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.

இதையும் படியுங்கள்: அண்ணாமலை.. இது தரங்கெட்ட செயல்., பத்திரிகையாளர் கண்ணியத்தை உறுதி செய்யுங்க.. பத்திரிகையாளர் மன்றம் அறிவுரை.

உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தாலும் அது போதுமானதாக இல்லை என்று கூறி அலைக்கழிக்கப்படுகின்றனர். பழங்குடிகளின் முந்தைய தலைமுறையினர் சாதிச்சான்றிதழ் வைத்திருப்பது அரிதாகவே இருப்பதால் இளம் தலைமுறையினருக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் உயர் கல்வி பயில முடியாமல் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது,

சாதி சான்றிதழ் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், வருவாய்துறை அலுவலகங்களில் குவிந்து கிடக்கின்றன. நரிக்குறவர்கள், இருளர்கள் காட்டு நாயக்கர்கள் போன்ற பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் அவர்களின் சமூக பொருளாதார நிலை மாறாமல் இருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் ஏராளம், இதேபோல வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்,

இணையும் தற்கொலைகள் தொடராமல் இருக்க சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி குறிப்பிட்ட காலத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர்கள், ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட உறுப்புகளை சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது.

அனைவருக்கும் சமூக நீதி வழங்குவதே திராவிட மாடல் அரசியல் நோக்கம் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசும், தமிழக முதல்வரும், பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!