நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் புலம்பலும்... வெளிச்சத்திற்கு வந்த மதுரை திமுகவில் சல சலப்பும்!!

By Narendran SFirst Published Oct 13, 2022, 6:14 PM IST
Highlights

மதுரையில் திமுகவின் உள்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இன்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரக்தியில் பேசினார் என்று திமுக வட்டாரத்தில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. 

மதுரையில் திமுகவின் உள்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இன்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரக்தியில் பேசினார் என்று திமுக வட்டாரத்தில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தலில் மாவட்ட செயலாளராக கோ தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த கோ. தளபதி அணியினரும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு பெற்று இருக்கும் செந்தில் அணியினரும் இரண்டு தரப்பினராக அடிக்கடி மோதி வந்துள்ளனர். இவர்களை சமாளிப்பதற்காக, இருவருடைய ஆதரவாளர்களையும் பாண்டிச்சேரி மற்றும் மகாபலிபுரம் பகுதியில் தனியார் விடுதிகளில் தங்க வைத்து பாதுகாத்துள்ளனர். மோதல் இவ்வாறு உச்சகட்டம் அடைந்த நிலையில், மீண்டும் தளபதி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஐயா ஸ்டாலின் அவர்களே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் அறிவித்த வீடுகள் தரமற்றதாக கட்டப்படுகிறது.. கொதிக்கும் சீமான்.

இந்நிலையில் திமுக தலைவராக மீண்டும் முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு, மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரை மடீட்சியா அரங்கில் இன்று விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முழுவதுமாகவே நிதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி புறக்கணித்தார். மேலும் அமைச்சர்களும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்தனர். இந்த நிலையில் மேடையில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன, ''தலைவரின் பேச்சை மீறி சிலர் செய்நன்றி மறந்த நிலையில் உள்ளனர். தலைவருக்காக நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியில், அவர்களும் புறக்கணித்து, யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மதுரையில் என்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 40 தொகுதி..! சட்டமன்றத்தில் 200 தொகுதி ..! அதிமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்த எஸ். பி வேலுமணி

அவர்களுக்கு ஒரு நாள் வீழ்ச்சி வரும். நான் படித்தவன் உண்மையை மட்டும் தான் தலைவரிடம் பேசினேன். நான் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால் சிலருக்கு பொருளாதாரத்தை விட பேராசைபடுகின்றனர். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். திறமையற்றவர்களை திறமையானவர்களாக காட்டக் முடியாது. ஆனால் சுயமரியாதை உள்ளவர்களை மாற்ற முடியாது. சிலர் திமுக கட்சி பொறுப்பை தருவதாக கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத்துள்ளனர். ஆனால் என் ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். இதே வழியில் செல்வோம். அனைத்தும் சிறப்பாக முடியும்'' என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளருக்கு எதிராக தனது ஆதங்கத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் திமுகவினரிடையே உள்ள கோஷ்டி பூசலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

click me!