நாடாளுமன்றத்தில் 40 தொகுதி..! சட்டமன்றத்தில் 200 தொகுதி ..! அதிமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்த எஸ். பி வேலுமணி

By Ajmal KhanFirst Published Oct 13, 2022, 4:13 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும்,சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேலும் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.  

 கோவையில் பறக்கும் திமுக கொடி

அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக இன்று 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது. இன்று கோவை மாநகர பகுதிகளில் காவல்துறை திமுக கொடியை பறக்க விட்டு அதிமுக கொடி பறக்க விடாமல் செய்கின்றனர்.  

17 ம் தேதி சட்டமன்றத்தை கூட்டியுள்ளனர். அன்றைய தினம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் தங்களை மட்டுமே மையப்படுத்திக் கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அம்மாவின் சாதனைகள் மற்றும் கட்சியின்  கொள்கைகள் குறித்து பதிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

திமுக நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டு கின்றனர்- பிடிஆர் வேதனை

நாடாளுமன்றத்தில் 40 தொகுதி

அகில இந்திய அண்ண திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் அறிவித்தது கோவையில் தான் என தெரிவித்தவர், அதிமுகவிற்கு கோவையில் பல செண்டிமெண்ட் உள்ளதாக கூறினார். ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கியது மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் மறைந்தாலும் அம்மா வாழ்ந்து வருகிறார். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தவர், சில மீடியா மட்டும் ஆட்சியை தூக்கி பிடித்து வருவதாக குற்றம்சாட்டினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக கூட்டனிக்கு தான் வாக்களிப்போம் என மக்கள் தயாராக உள்ளனர்.

எனவே அந்த வாக்கை அதிமுகவிற்கு கொண்டு வர நிர்வாகிகளும்  உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளில் அதிமுக வெல்லும் என தெரிவித்தவர், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் என கூறினார். திமுக எம் பிக்கள் மக்கள் பிரச்சினை குறித்து எதுவும் பேசுவதில்லை. பாராளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டுள்ளனர். காவிரி பிரச்சிணையில் நாங்கள் எம்.பி க்களாக இருந்தபோது 23 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" சொல்பவர்கள் அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் - இபிஎஸ்

click me!