சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை... மேயர் பிரியாவை செல்லமாக கலாய்த்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2022, 3:10 PM IST
Highlights

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான் மேயர் பிரியா என்றும், யாரோ சொன்னதைக் கேட்டு 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான் மேயர் பிரியா என்றும், யாரோ சொன்னதைக் கேட்டு 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இறுதிநேரத்தில் அவசரகதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசின் செயல்களை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது.

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அதற்குப் பிறகு பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடாக மாறியது. அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது அதனால திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை அதனால்தான் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என முதலமைச்சர் அமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு மழைக்குள் சென்னையில் வடிகால் பணிகள் முழுவதும் சீர் செய்யப்படும், தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது உறுதி அளித்தார். அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது மழை காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக நீர் வடிகால் பணிகள் வேகம் எடுத்து உள்ளது பல இடங்களில் துரிதகதியில் வடிகால் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 25 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறினார்.

இதையும் படியுங்கள்: "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" சொல்பவர்கள் அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் - இபிஎஸ்

இந்நிலையில் பிரியாவின் இத்தகவலை மேற்கோள் காட்டி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதாவது, சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி  மன்றம் வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார், அதற்காக அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்

இதையும் படியுங்கள்: பள்ளிக்கல்வித்துறையில் 2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை.. முதலமைச்சர் இன்று வழங்கினார்..

தீயசக்தி கருணாநிதி குடும்பத்தில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. ராயப்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் 17ஆம் தேதி காலை 9 மணி அளவில் எம்ஜிஆர் திருவுருவச்  சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவிக்க உள்ளார். இதேபோல உயர் கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த முடியாத அளவுக்கு இந்த விடிய அரசு பூட்டு போட்டு வைத்துள்ளது. எனவே அதை  பராமரிக்க அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்கவில்லை. 17 ஆம் தேதி அந்த சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளரை சந்திக்க வந்தேன் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி மேயர் பிரியா சொல்கிறார், ஆனால் இன்னும் பணிகள் முடியவில்லை என்பதுதான் உண்மை, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை தான் சென்னை மேயர் பிரியா,  95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக கூறுவது தவறு என ஜெயகுமார் விமர்சித்தார். மேலும் தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல்  இறுதி நேரத்தில் அவசர அவசரமாக வடிகால் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால்  மணிக்கணக்கில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும் என அவர் எச்சரித்தார். 
 

click me!