திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..! திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி

Published : Jun 26, 2022, 12:51 PM ISTUpdated : Jun 26, 2022, 12:57 PM IST
திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..!  திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி

சுருக்கம்

அக்னிபாத் திட்டம் தொடர்பாக காங்கிரசின் ப.சிதம்பரம் சமீபகாலமாக வித்தியாசமாக பேசி வருவதாகவும் அவர் ஒரு சட்ட மேதை என்றும் அவர் இப்படி பேசுவது வருத்தம் அளிப்பதாக பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.  

அக்னிபாத் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தமிழக பாஜக மாநில முன்னாள் ராணுவப் பிரிவு சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த அக்னி பாத் திட்டம் குறித்து தமிழக முழுவதும் மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதன் தொடக்கமாக தமிழக பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கொடியசைத்து இந்த விழிப்புணர்வு யாத்திரையை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மத்திய அரசு  அக்னிபாத் என்ற ஒரு அருமையான திட்டத்தை அறிவித்து அதிலே முப்படைகளிலும் ஆண்களும்,பெண்களும் சேரலாம் என்று அறிவித்துள்ளது. அந்த திட்டத்தில் இளைஞர்கள் சேரவேண்டும் இந்திய ராணுவம் வலுவுள்ளதாக, பலமிக்கதாக ஒரு இளமை துடிப்போடு இருக்க வேண்டும் என்றும் இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் பாஜக அரசின் கொள்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆன் லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்.! தடை சட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் -ராமதாஸ்

ரயில்வே சொத்து சேதம்

அந்தக் கொள்கையை வகுத்து தந்தவர் பிரதமர் மோடி என்றும் ஆனால் அந்த கொள்கையை பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக்கூடிய வாய்ப்பு இருந்தும் நாடாளுமன்றத்தில் பேசுவதைத் தவிர்த்துவிட்டு  மக்கள் மன்றத்திற்கு சென்று போராட்டங்களை நடத்துவதாக தெரிவித்தார்.நாட்டினுடைய சொத்தாக உள்ள ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், ரயில்களில் தீ வைத்து பயணிகளுக்கு தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த போராட்டத்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்து வருவதாகவும் கூறினார். அக்னிபாத் திட்டத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை பணிவாக கேட்பதாகவும் தேசம் இருந்தால்தான் நாம் வாழ முடியும் என்றும் தேசத்தின் நலனுக்காக இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் வி.பி.துரைசாமி வேண்டுகோள் விடுத்தார்.

குடும்பத்திற்காக சுயநலமாக செயல்பட்டார்.! டிடிவி தினகரனோடு ரகசிய பேச்சுநடத்தினார்..ஓபிஎஸ் மீது சீறிய உதயகுமார்

திமுக சட்ட ஆலோசகர் கி.வீரமணி

அக்னிபாத் திட்டம் குறித்து ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு  விளக்கமளித்த வி.பி துரைசாமி ப.சிதம்பரம்  சமீபகாலமாக கொஞ்சம் மாதிரியாக பேசி வருவதாகவும் அவர் ஒரு சட்ட மேதை என்றும் அவர் இப்படி பேசுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். டெல்லியில் அதிமுக அடகு வைக்கப் பட்டுள்ளதாக கி.வீரமணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கி.வீரமணி போன்றவர்கள் எல்லாம் திமுக அரசுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை தருபவர்கள் என்றும் அந்த இடத்தில் அவர் தற்போது உள்ளதாகவும் கூறினார். ஏதோ சமூக நீதியை இவர்கள் தான் கண்டுபிடித்தது போலவும், சமூகநீதி வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் போலவும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும்  நினைப்பதகாவும் விமர்சனம் செய்தார்.

இதையும் படியுங்கள்

திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக முன்னிலை..! பஞ்சாப் மக்களைவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் முன்னிலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு