AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

By Raghupati RFirst Published Jun 26, 2022, 12:41 PM IST
Highlights

AIADMK : எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை விவகாரம்

சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான். 

காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். 

இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

இபிஎஸ் Vs ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது. இரட்டைத் தலைமையோடு திமுகவை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறப்பட்டதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்து சென்றார் வைத்தியலிங்கம்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள் வீசப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வேனின் டயரும் பஞ்சராக்கப்பட்டது. 

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஜூலை 11 அன்று பொதுக்குழு நடந்தே ஆக வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பு எக்காரணம் கொண்டும் நீதிமன்றத்தில் ஜெயிக்க கூடாது என்றும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர் இபிஎஸ் தரப்பு. 

எடப்பாடி தரப்பு ஆலோசனை

பொதுக்குழுவை நடத்தவிடாமல் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றால் அதை முறியடிக்க என்ன செய்யலாம் என்று எடப்பாடி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. பொதுக்குழுவை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்புகளுக்கு இடையே மோதல்கள் வெடித்து கொண்டிருக்கும் வேளையில், யார் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று விரைவில் தெரியும் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

click me!