குடும்பத்திற்காக சுயநலமாக செயல்பட்டார்.! டிடிவி தினகரனோடு ரகசிய பேச்சுநடத்தினார்..ஓபிஎஸ் மீது சீறிய உதயகுமார்

By Ajmal KhanFirst Published Jun 26, 2022, 10:19 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனோடு ரகசியமாக சந்தித்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

 ஒற்றை தலைமை விவகாரம்  அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லி சென்ற ஓபிஎஸ் குடியரசு தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதனையடுத்து நேற்று சென்னை திரும்பிய ஒபிஎஸ் இன்று சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு செல்கிறார். இந்தநிலையில் ஓபிஎஸ்சை மதுரை விமான நிலையில் இருந்து பெரியகுளம் வரை உற்சாகமாக வரவேற்க்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தேனிக்கு செல்லும் வழியில் உள்ள 7 இடங்களில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.  இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கட்சிக்காக முடிவு எடுப்பதில் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவில் இருந்தும் பின் வாங்கியதில்லை, ஆனால் ஓபிஎஸ் எந்த முடிவிலும் உறுதியாக இருந்தது இல்லையென கூறினார். 

பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி

திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் பிரதான கொள்கை, ஆனால் சட்டமன்றத்தில் கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி பட வசனம் பற்றி ஓபிஎஸ் பேசுகிறார். இதனையடுத்து ஓபிஎஸ் மகனும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திர நாத் குமார், தமிழக முதலமைச்சரை சந்திக்கிறார். திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என கூறுகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மன தளர்வு ஏற்படும் நிலை உருவாகும், எனவே திமுகவை மன உறுதியோடு எதிர்க்கும் தலைமை வேண்டும் என கூறினார். ஓபிஎஸ் தர்மயுத்தத்தின் போது 3 கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இணைக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.  இது போன்ற பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டது ஓபிஎஸ் தான்.. அன்று தொடங்கிய பஞ்சாயத்து தான் இன்றும் நடைபெற்று வருகிறது. ஆனால் டிடிவி தினகரனோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவரது வீட்டிற்கு சென்று பேசுகிறார். எதற்காக இந்த ரகசிய சந்திப்பு யாரை வீழ்த்த இந்த சந்திப்பு நடைபெற்றது என கேள்வி எழுப்பினார், எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும், முடிவை மாற்றி மாற்றி எடுக்கும் தலைமை வேண்டாம்.

AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்

ஓபிஎஸ் குஷ்தி சண்டைக்கு தயார் இல்லை

பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறுகிறார். ஆனால் முத்த தலைவர்கள் சென்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்.பொதுக்குவிற்கு அழைப்பு விடுத்துவிட்டு அந்த தலைவரே நீதிமன்றம் காவல்துறைக்கு சென்று பொதுக்குழுவை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறிய வரலாறு அதிமுகவில் இல்லையென தெரிவித்தார். பொதுக்குழுவை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சி தோல்வி அடைந்த பிறகு மீண்டும் அந்த பொதுக்குழுவிற்கே வருகிறார். அப்படி வந்த போதும் தாங்கள் மேடையில் பேசிய போது அண்ணன் என்று தான் கூறி வரவேற்றோம். திமுகவிற்கு எதிரான குஷ்டி சண்டையில் இபிஎஸ் மட்டும் தயாராக உள்ளார். ஆனால் ஓபிஎஸ்  குஷ்தி சண்டைக்கு தயாராக இல்லையென கூறினார்.  இரட்டை தலைமை விவகாரத்தால் முடிவு எடுப்பதில் கால தாமதம் ஆகிறது. ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சி கூட முடிவு அறிவித்துவிட்டது. ஆனால் அதிமுகவில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

click me!