”வெளிநாடு சென்றது இதற்குத்தான்” உண்மையை உடைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி ! எதற்கு தெரியுமா ?

By Raghupati RFirst Published Jun 25, 2022, 11:31 PM IST
Highlights

Senthil balaji :தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரே நிகழ்ச்சியில் 76, 486 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்திற்கு சுமார் 76, 486 பயனாளிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 2ம் தேதி கரூர் வருகை தர உள்ளார். திருமாநிலையூர் பகுதியில் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

முதல்வர் ஸ்டாலின் வருகை

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரே நிகழ்ச்சியில் 76, 486 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் வரும் 2ம் தேதி கரூர் வருகையின் போது நலத்திட்டங்களை வழங்க உள்ளார். 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கிய நம் மாவட்டத்தில் 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. கடலில் காற்றாழை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காகவே வெளிநாடு சென்றோம். 

கடற்கரையில் இருந்து 50 கி. மீ தொலைவில் கடலில் காற்றாழைகள் அமைக்கப்பட்டுள்ளது. காற்றாழை அமைக்க, 50 கி. மீ தூரத்திற்கு கேபிள் அமைக்கும் செலவு, ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு உள்ளிட்ட தகவல்களை கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், அதிகாரிகள், முதல்வரிடம் காண்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வெளிநாடு சென்றது காற்றாழை அமைக்கும் முதற்கட்ட முயற்சி என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது என்றார். கரூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், என்னென்ன திட்டங்கள் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

click me!