AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

By Raghupati RFirst Published Jun 25, 2022, 10:04 PM IST
Highlights

AIADMK : எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில், அவர் பொது செயலாளர் பதவிக்கு வந்தவுடன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவோம் என மாவட்ட செயலாளர் மூலம் அழுத்தம் தந்தனர்.

அதிமுக பொதுக்குழு

சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான். 

காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி.சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். 

இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

ஒற்றை தலைமை விவகாரம்

ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது. இரட்டைத் தலைமையோடு திமுகவை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறப்பட்டதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்து சென்றார் வைத்தியலிங்கம்.

ஒற்றை தலைமை விவகாரம் நிலவிவரும் நிலையில், ஓபிஎஸ் டெல்லி சென்று சென்னை திரும்பினார்.  ஓபிஎஸ்க்கு சென்னை விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் ஏறிய ஓ பன்னீர்செல்வத்திடம் மகளிரணி நிர்வாகி ஜெயதேவி மன்னிப்பு கோரினார். 

இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

ஓபிஎஸ் Vs இபிஎஸ் 

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தென்சென்னை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஜெயதேவி பொதுக்குழுவிற்கு முன்தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் வந்து ஓ பன்னீர்செல்வத்திடம் மன்னிப்பு கேட்டார்.பொதுக்குழுவில் பங்கேற்க மட்டுமே தான் அங்கு சென்றதாக கூறிய ஜெயதேவியிடம், விடுங்க, பாத்துக்கலாம் என்று ஓபிஎஸ் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில், அவர் பொது செயலாளர் பதவிக்கு வந்தவுடன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவோம் என மாவட்ட செயலாளர் மூலம் அழுத்தம் தந்தனர். அதனால் தான் அங்கு சென்றோம். அரை மணி நேரம் தான் அங்கு இருந்தோம். அதன் பின்னர் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து வரும் வரை மன நிம்மதி இல்லாமல் இருந்தேன்.தற்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன் மீண்டும். ஓபிஎஸ் -க்கு ஆதரவு அளிக்க வந்து விட்டேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்

click me!