Agnipath : துணி துவைக்கிறது, முடி திருத்துறது தான் அக்னிபத் திட்டமா ? கொந்தளிக்கும் கி.வீரமணி

Published : Jun 25, 2022, 06:50 PM IST
Agnipath : துணி துவைக்கிறது, முடி திருத்துறது தான் அக்னிபத் திட்டமா ? கொந்தளிக்கும் கி.வீரமணி

சுருக்கம்

Agnipath : ‘மதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான் எனவும், மதுரை ஆதினம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம்’ என்று கூறியுள்ளார் திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி.

அக்னிபத் திட்டம் 

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அக்னிபத் திட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என்று கூறியது மத்திய அரசு. பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் நேற்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது. 

நாடு முழுவதும் இளைஞர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிடர் கழகத்தினர் சார்பில் செயலவைத்தலைவர் அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பங்கேற்றுகொண்டார். 

இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

கி.வீரமணி பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய கி.வீரமணி, ‘பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்தேர்வில் அதிக தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும், திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, உயர்நீதிமன்ற பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணிதுவைக்கலாம், முடி திருத்த போகலாம் என பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுவது இளைஞர்களின் கோபத்தை்தூண்டுகின்றனர்,  வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, அக்னிபாத்திற்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடிவருகின்றனர். 

மதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான் எனவும், மதுரை ஆதினம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம். பட்டினபிரவேசம் என்னால் தெரியவந்தது போல சனாதானத்தில் ஆதினம் என்றால் யார் என்பதையும் அனைவருக்கும் தெரியட்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!