AIADMK : ஒற்றைத் தலைமை வந்துவிட்டால் இபிஎஸ் கைகளுக்குள் கட்சி முழுமையாக சென்றுவிடும் என்பதால் அதனை தடுக்கும் நோக்கில் பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். இபிஎஸ் தரப்பு சென்னையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இபிஎஸ் Vs ஓபிஎஸ்
அதிமுகவுக்குள் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒற்றைத் தலைமை பிரச்னையால் மீண்டும் கட்சி இரண்டாகுமோ என்ற கவலையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். மேலும், இபிஎஸ்ஸோ, ஓபிஎஸ்ஸோ விட்டுகொடுத்து சென்று கட்சியை வளர்க்க வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஒற்றைத் தலைமைதான் என்பதில் இபிஎஸ், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓபிஎஸ்ஸும் தீவிரமாக இருக்கின்றனர்.
இதற்கிடையே ஒற்றைத் தலைமை வந்துவிட்டால் இபிஎஸ் கைகளுக்குள் கட்சி முழுமையாக சென்றுவிடும் என்பதால் அதனை தடுக்கும் நோக்கில் பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். இபிஎஸ் தரப்பு சென்னையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ்-க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்தும் சுவரில் எழுதி இருந்த இபிஎஸ் பெயரை அழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!
எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை போடி நகர செயலாளர் பழனிராஜ் அகற்றினார். மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அதிமுவினர் மை ஊற்றி அழித்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அகற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தை நேற்று அகற்றியிருக்கும் சூழ்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தை அகற்றியிருப்பதும், மையால் படத்தை மறைப்பதும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்