தொண்டர்கள் நம்ம பக்கம் இருக்காங்க! அவங்க பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்காங்க! இபிஎஸ்க்கு எதிராக வெடித்த OPS.!

By vinoth kumar  |  First Published Aug 29, 2022, 7:37 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் 80க்கும் மேற்பட்ட கார்களில் 500 அதிமுகவினர் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


பிரச்சனையை யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தொண்டர்கள் நம் பக்கம். குண்டர்கள் அவர்கள் பக்கம் உள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பத்தில் பெருவாரியான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்து வந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர்.  நாளுக்கு நாள் ஓபிஎஸ் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் 80க்கும் மேற்பட்ட கார்களில் 500 அதிமுகவினர் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆறுகுட்டி போனது போல் வேறு எந்த குட்டியும் போகாது... எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை!!

அப்போது பேசிய ஓபிஎஸ்;- அதிமுகவில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சனையை யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பேரறிஞர் அண்ணா கூறியபடி எதிர்க்கட்சியாக இருக்கும் போது சகிப்புத்தன்மையோடும் பக்குவத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். எந்த நோக்கத்திற்காக அதிமுக துவக்கப்பட்டதோ அதை எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நடத்திச்செல்ல வேண்டும். தேவையற்ற குற்றச்சாட்டுகளை அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. 

இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி கடந்தத 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூச்சல் குழப்பங்கள் மத்தியிலும் ரவுடிகள் கேடிகளால் கூட்டப்பட்டது. வரம்பு மீறிய செயல்கள் அந்த பொதுக்குழுவில் அரங்கேறியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டச் செயலாளர்கள் இரவு முழுவதும் ரவுடிகளை அங்கேயே வைத்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று மன அமைதிக்காக தலைமைக்கழகம் சென்றபோது எங்களை தாக்கினார்கள்.

இதையும் படிங்க;-  விஸ்வாசம் என்றால் ஓபிஎஸ்.. கடைசிவரை தொண்டன்.. எடப்பாடி ஆட்சியில் சீர்கேடு - கடுப்பான ஓபிஎஸ்!

இந்த இயக்கத்தில் தற்போது தொண்டர்கள் நம்மிடமும், குண்டர்கள் அவர்களிடமும் உள்ளனர். அதிமுக ஏற்கனவே சேவல், இரட்டை புறா அணிகளாக பிரிந்தபோது தேர்தலில் பலத்த அடி கிடைத்தது. தற்போதும் பிரிந்து செயல்பட்டால் மீண்டும் அதுதான் கிடைக்கும். எனவே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் பிடிவாதம் கூடாது. நான் முதல்வராக வேண்டும் என்று கூறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்கிறேன். நான் என்றுமே முதல்வர் பதவிக்கோ, கட்சியின் தலைமை பதவிக்கோ ஆசைப்படவில்லை. ஒற்றுமையாக கட்சியை வழிநடத்தத வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறினார்.

இதையும் படிங்க;- இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்...! அலறும் இபிஎஸ் அணி... அடுத்து தூக்கப்போவது யாரை தெரியுமா...?

click me!