ஆறுகுட்டி போனது போல் வேறு எந்த குட்டியும் போகாது... எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை!!

By Narendran SFirst Published Aug 28, 2022, 11:47 PM IST
Highlights

அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க: தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு.. நாம் தமிழர் தம்பிகளுக்கு உத்தரவு போட்ட சீமான் !

இந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதனிடையே சிலர் மாற்றுக்கட்சியை நோக்கி பயணிக்க தயாராகிவிட்டனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடன் இருக்கும் எல்லா குட்டிகளையும் நன்றாக தான் வைத்துள்ளோம். ஆறுகுட்டி வெளியே போனது போல் வேறு எந்த குட்டியும் வெளியே போகாது. அதிமுகவில் சசிகலாவையும், டி.டி.வியையும் இணைக்க ஓ.பி.எஸ் அழைத்திருப்பது அவரின் நிலைப்பாடு. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ஓபிஎஸ் சசிகலா ஆகியோரின் கருத்து. ஆனால் தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு. அவர்களுக்காக தான் கட்சி என்று தெரிவித்தார். 

click me!