Thiruma: தமிழ்நாட்டிற்கு தனி கொடி... விடுதலை சிறுத்தை தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Apr 9, 2024, 11:23 AM IST

அமைச்சரவையில் இட ஒதுக்கீடு, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, தமிழ்நாட்டிற்கு என தனி கொடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

Tap to resize

Latest Videos

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் பெரு‌முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  இந்தியாக் கூட்டணியின் முதல்புள்ளியை தொடங்கியவர் ஸ்டாலின். தமிழ்நாட்டுடன் தேர்தலை சுறுக்காமல் இந்திய அளவில் தேர்தல் களத்தை விரிவாக்கினார். பாஜகவிற்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்.
பாஜக அரசை வீழ்த்தவது தான் ஒன்றை இலக்கு‌ என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டார். அதனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள

  • ஆளுநர் பதவி ஒழிக்க வேண்டும்
  • ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
  • மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு
  • அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்
  • அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு
  • ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை நடத்த வேண்டும்
  • கச்சத்தீவை மீட்க வேண்டும் 
  • ஒரே நாடு ஒரே தேர்த்ல் முறைக்கு எதிர்ப்பு

 

அமைச்சரவையில் இட ஒதுக்கீடு

  • தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து
  • வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை
  • தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு 
  • இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம் 
  • வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல் 
  • 200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்
  • விவசாயத்திற்கு தனி பட்ஜெட் 
  • பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை 
  • தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி 
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் 
  • அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு 
  • ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்

இதையும் படியுங்கள்

என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.. திட்டவட்டமாக மறுக்கும் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு!

click me!