Annamalai : கமல்ஹாசனுக்கு மனநல மருத்துவமனையில் மூளை பரிசோதனை செய்யனும்! அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Published : Apr 08, 2024, 02:04 PM ISTUpdated : Apr 10, 2024, 10:35 AM IST
Annamalai : கமல்ஹாசனுக்கு மனநல மருத்துவமனையில் மூளை பரிசோதனை செய்யனும்! அண்ணாமலை கடும் விமர்சனம்!!

சுருக்கம்

கமல்ஹாசனுக்கு மெண்டல் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, அவரது மூளை சரியாக செயல்படுகிறதா என சோதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சதி வலையில் நயினார் நாகேந்திரன்

கோவையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார். சென்னையில் மிகப்பெரிய அளவில் ரோட் ஷோ நடைபெறவுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்துகொள்ளவுள்ளதாக கூறினார்.  நெல்லை பாஜக வேட்பாளருக்காக கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  

சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர் சிக்க வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட  முறையில் அவர் இல்லைன்று கூறி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக தெரிவித்தார். சதி வலையில் நயினார் பெயர் சொல்லப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென கூறிவிட்ட பிறகு இதில் பேசுவதுற்கு ஒன்றம் இல்லையென கூறினார்.

திருடன், திருடன் என ஆர்.எஸ் பாரதி ஓடுகிறார்

பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனை இல்லை. எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லையென கூறினார். தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் சொந்தமான இடங்களில் சோதனை செய்ய வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 

திருடன், திருடன் என ஆர்.எஸ் பாரதி ஓடிக்கொண்டிருக்கிறார். உண்மையான திருடன் ஆர்.எஸ்.பாரதி என தெரிவித்தார். கோவையில் 85 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தபால் ஓட்டு போட்டு வருகிறார்கள். ஓட்டு போடுபவர்களுக்கு தங்கத்தோடு, 2000 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது.  

யாருக்கு எந்த இடம்.?

அடுத்த 10 நாட்களில் கோவையில் உள்ள மக்களுக்கு என்ன என்ன இலவசம் தருகிறார்கள் என தெரியவரும். எனவே பணத்தை பற்றி பேச தார்மீக உரிமை ஒரு கட்சிக்கு இல்லையென்றால், அது திமுக என விமர்சித்தார். வீட்டிற்குள் இருந்து திருடன் வெளியே ஓடி வந்து சாலையை பார்த்து திருடன், திருடன் என கத்தி காவல்துறை குழப்புவதற்காக செய்யும் நடவடிக்கை என விமர்சித்தார். அண்ணாமலை ரெடிமேட் அரசியல் தலைவர் என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதற்கு பதில் அளித்தவர், ஜூன் 4 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள், எந்த கட்சி எங்கிருக்கிறது. எத்தனை ஓட்டுக்கள் வாங்குகிறார்கள் என தெரியும். 

மெண்டல் மருத்துவமனையில் பரிசோதனை

எரிகின்ற விவிறகுகு அணையும் போது பிரகாசமாக எரியுமாம். அது போலத்தால் அரசியல் தலைவர்கள் கருத்து உள்ளது என தெரிவித்தார். இந்தியாவின் தலைநகராக நாக்பூராக மாற்ற பாஜக செயல்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்திற்கு பதில் அளித்த அவர், யார் இப்படி சொன்னார்களோ மெண்டல் மருத்துவமனைக்கு கூட்டி சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மூளை செயல்பாடுகள் பரிசோதனை செய்ய வேண்டும். உண்மையாகவே நல்லா இருக்காங்களா.? இரண்டு பக்க மூளையும் சரியாக செயல்படுகிறதா என பரிசோதனை செய்யனும்.  கமலுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  ராஜ்ய சபா சீட்டிற்காக தனது கட்சியை திமுகவிடம் விற்றுவிட்டதற்காக கமல்ஹாசன் கூவுகிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!