வீடு மொட்டை மாடியில் கட்டுக்கட்டாக சிதறிக்கிடந்த பணம்.! அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீடா.? போலீசார் விசாரணை

By Ajmal Khan  |  First Published Apr 8, 2024, 9:20 AM IST

நள்ளிரவில் வீட்டை நீண்ட நேரமாக தட்டியும் கதவை திறக்காத காரணத்தால் மாடி வழியாக ஏறி சென்று போலீசார் சோதனை செய்த போது மொட்டி மாடியில் கட்டுக்கட்டாக பணம் சிதறி கிடந்த்து தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


தேர்தல்- பறக்கும் படை சோதனை

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியானது ஆங்காங்கே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணைய பறக்கும் படை தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறி 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வேலூர் தொகுதிக்குட்பட்ட கே.வி.குப்பத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

undefined


வீட்டை உடைத்து சோதனை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நடராஜனின் வீட்டை சோதனையிட முயன்றனர். நள்ளிரவு நேரத்தில் நடராஜன் வீட்டிற்கு வந்த பறக்கும் படையினர் நீண்ட நேரமாக வீட்டின் கதவை தட்டிக்கொண்டே இருந்தனர். ஆனால் வீட்டை திறக்காததால் காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரமாக போராடினர்.

ஆனாலும் நடராஜன் வீட்டார் கதவை திறக்காததால் காவல் துறையினர் மொட்டை மாடியில் ஏறி சோதனை மேற்கொண்ட போது, மொட்டை மாடியில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறிக்கிடந்தது தெரியவந்து. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், உள்ளூர் ஆட்கள் உதவியுடன் நடராஜன்  வீட்டை திறந்து சோதனை செய்தனர். அப்போது 2 பீரோவை உடைந்து சேதனை செய்ததில் மேலும் 5 லட்சம் இருந்தது தெரியவந்தது. 

யாருடைய பணம்.?

இது தொடர்பாக வீட்டில் இருந்த நடராஜன் - விமலா ஆகிய வயதான தம்பதியரிடம் மேற்கொண்டு விசாரணையில் இது தங்கள் சொந்த பணம் என தெரிவித்துள்ளனர்.ஆனாலும் கைபற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் 7 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கே.வி.குப்பம் வட்டாட்சியரிடத்தில் ஒப்படைத்தனர்.  அதே நேரத்தில் இந்த பணம் வாக்காளர்களுக்காக கொடுப்பதற்காக மறைத்து வைத்துள்ள பணம் என கூறப்படுகிறது. மேலும் நடராஜன் அமைச்சர் துரைமுருகனின் தூரத்து உறவினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்.? வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதா.? பிரசாத் கிஷோர் அதிரடி பதில்

click me!