அரசு லெட்டர் பேடில் தம்பிதுரை அறிக்கை - வெங்கய்ய நாயுடு கண்டனம்

First Published Jan 2, 2017, 4:26 PM IST
Highlights


முதலமைச்சராக சசிகலா வரவேண்டும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அரசு லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முதலமமைச்சராகாவும் பொது செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா கடந்த டிச. 5 திடீர் மரணம் அடைந்தார்.

அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

சசிகலாதான் கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்தித்தும் அறிக்கைகள் பேட்டிகள் மூலமாகவும் வலியுறுத்தினார்.

சசிகலா பொது செயலாளராக ஆவதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தபோதும் அதிமுக பொதுக்குழுவில் சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் பொதுசெயலாளராகவும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, மதுசூதனன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் சசிகலா எதிர்ப்பாளர் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்த தம்பிதுரை இன்று சசிகலா முதலவர் ஆக வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டார்.

இன்று வெளியான அந்த அறிக்கையை தம்பிதுரை பாராளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடில் வெளியிட்டிருந்தார்.

இதை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் அறிக்கை பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்பதில் பாஜக தலையிடவில்லை. ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை அரசு லெட்டர் பேடில் இது போன்று அறிக்கை வெளியிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மத்திய அமைச்சர் இவ்வாறு பகிரங்கமாக கண்டித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!