உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டியே முருகா... நெல்லைக் கண்ணனை வீட்டுக்கே போய் சந்தித்த வேல்முருகன்..!

By vinoth kumarFirst Published Jan 12, 2020, 1:36 PM IST
Highlights

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்தனர். 

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் நெல்லை கண்ணன் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து வேல்முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்தனர். 

மேலும், நெல்லை கண்ணனை கைது செய்யவிட்டால் தர்ணா போராட்டம் நடத்துவோம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். அதைப்போலவே சென்னை மெரினாவில் பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பெரம்பலூரில் கைது செய்தனர். பின்னர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாள் நீதிமன்ற காவலில் சேலம் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- துப்புகெட்ட, அறிவுகெட்ட அரசே... இஸ்லாமியருக்கு முட்டுக்கொடுத்து மாமிகளை இடித்துரைத்த வேல்முருகன்..!

இதையடுத்து நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நெல்லை கண்ணணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை 7 மணியளவில் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையின் பின்பக்க வாசல் வழியாக காரில் ஏறி சென்றார்.

இதையும் படிங்க;- மோடியையும், அமித்ஷாவையும் ஆட்டி படைக்கும் நாக்கால் நக்கும் கூட்டமே... ஈட்டியாய் தாக்கிய வேல்முருகன்..!

இந்நிலையில், ஜாமீன் விடுதலையான நெல்லை கண்ணனை அவரது வீட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் நெல்லை கண்ணனை விட  வேல்முருகன் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!