திமுகவின் திடீர் செயற்குழு அழைப்பு..! பேராசிரியர் அன்பழகனுக்கு ஓய்வு..?

Published : Jan 12, 2020, 12:55 PM IST
திமுகவின் திடீர் செயற்குழு அழைப்பு..! பேராசிரியர் அன்பழகனுக்கு ஓய்வு..?

சுருக்கம்

கடந்த ஆண்டே திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது திருச்சி கே.என் நேரு பொதுச் செயலாளர் பதவி ஏற்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே தற்போதைய சூழலில் திமுகவில் மிகவும் சீனியர் நிர்வாகி என்றால் அது துரைமுருகன் தான். அவர் பொருளார் பதவியில் இருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் பதவி மீது துரைமுருகனுக்கும் ஒரு கண் இருப்பதாக சொல்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு வருபவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன் மகனுக்கும் அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

திமுக திடீரென செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கான காரணம் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடு என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதமே திமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் திமுகவிற்கு புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற அவசரம் தான். காரணம் தற்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக சிரமப்பட்டு வருகிறார். அவருக்கு நினைவு கிட்டத்தட்ட தப்பிவிட்டதாக சொல்கிறார்கள். திமுகவில் தலைவருக்கு நிகரான அதிகாரம் பொதுச் செயலாளர் பதவிக்கு உண்டு. ஒருவரை கட்சியில் சேர்க்க வேண்டும் இல்லை நீக்க வேண்டும் என்றால் பொதுச் செயலாளரின் ஒப்புதல் அவசியம்.

இதேபோல் கட்சியை தினசரி நிர்வகிக்கவும் பொதுச் செயலாளரின் அனுமதி அவசியம். இந்த அளவிற்கு மிக முக்கியமான பதவி பேராசிரியரிடம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கலைஞரின் மிக நெருக்கமான நண்பர். திமுகவின் மிக மூத்த நிர்வாகி போன்ற காரணங்களால் அந்த பதவியில் அன்பழகன் தொடர்ந்து இருந்து வருகிறார். 2016 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இருந்தாலும் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறார்.

இதற்கிடையே நினைவு தப்பிய பேராசிரியரிடம் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி இருப்பது கட்சியின் நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கருதினார். இதனை தொடர்ந்து பொதுச் செயலாளராக வேறு ஒருவரை நியமிக்க அவர் முடிவெடுத்தார். இதற்கு பேராசிரியரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததாக கூறினார்கள். ஆனால் அப்போது பொதுச் செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் ஏற்பட்ட சில நெருடல் காரணமாக அந்த முடிவை ஸ்டாலின் தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டே திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது திருச்சி கே.என் நேரு பொதுச் செயலாளர் பதவி ஏற்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே தற்போதைய சூழலில் திமுகவில் மிகவும் சீனியர் நிர்வாகி என்றால் அது துரைமுருகன் தான். அவர் பொருளார் பதவியில் இருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் பதவி மீது துரைமுருகனுக்கும் ஒரு கண் இருப்பதாக சொல்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு வருபவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன் மகனுக்கும் அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

இதனால் துரைமுருகன் அல்லது கே.என் நேரு ஆகிய இருவரில் ஒருவர் திமுக பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முடிவை எடுக்கவே திமுக செயற்குழு கூட்டம் இந்த மாத இறுதியில் அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி