அடித்து தூக்கிய எடப்பாடி... கோட்டைவிட்ட மு.க.ஸ்டாலின்.... திமுக பருப்பு சட்டமன்றத்தில் எடுபடுமா..?

By vinoth kumarFirst Published Jan 12, 2020, 12:43 PM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 வார்டுகளில் அதிமுக கூட்டணி 242 இடங்களிலும், திமுக கூட்டணி 272 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி அதிமுகவை விட 30 மாவட்ட வார்டு உறுப்பினர்களை அதிகம் பெற்றது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மறைமுக தேர்தலில் மு.க.ஸ்டாலின் கோட்டைவிட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுக 12, அதிமுக 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 வார்டுகளில் அதிமுக கூட்டணி 242 இடங்களிலும், திமுக கூட்டணி 272 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி அதிமுகவை விட 30 மாவட்ட வார்டு உறுப்பினர்களை அதிகம் பெற்றது. 

அதேபோல், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் திமுக 2,099 இடங்களிலும், அதிமுக 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்முறையாக ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்று கூறப்பட்டது. புதிதாக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் 6-ம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கூட்டணி அரியலுார், கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, துாத்துக்குடி, விருதுநகர் என 14 மாவட்டங்களில் தலைவர் பதவியை கைப்பற்றியது. அதேபோல், திமுக கூட்டணியினர் மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலுார், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி என 12 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினர். சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மறைமுக தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியாதது ஸ்டாலினை எரிச்சலடைய செய்துள்ளது. ஆகையால், 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூகம் எடுபடுவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. 

click me!