இதுதான் திராவிட மாடலா? திமுகவை எதிர்க்கும் விசிகவினர்.. சாட்டையை சுழற்றிய திருமாவளவன் !

Published : Aug 09, 2022, 09:58 PM IST
இதுதான் திராவிட மாடலா? திமுகவை எதிர்க்கும் விசிகவினர்.. சாட்டையை சுழற்றிய திருமாவளவன் !

சுருக்கம்

திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மீது திமுகவின் இந்த பாசம் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாகவே மாறி வருகிறது என்று கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன.

கூட்டணியில் இருக்கும் அதிமுக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இணக்கமான உறவைக் கடைபிடிக்காமல் தவிர்த்த நிலையில், ஸ்டாலினுடன் காட்டிய நெருக்கம் அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்காக சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூடுதல் இணக்கம் காட்டியது பல்வேறு யூகங்களைக் கிளப்பியது. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மீது திமுகவின் இந்த பாசம் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அரசல் புரசலாக இப்படி பிரச்னை இருக்க, மற்றொரு சம்பவம் நடைபெற்று அணைந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம்,  கீழ்எடையாளம் கிராமத்தில் அரக்கோணம் திமுக எம்.பி  ஜெகத்ரட்சகனின் கல்லுாரி கட்டும் பணி நடந்து வருகிறது. 

இந்த இடம் பஞ்சமி நிலம் என்றும், பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா ? என்றும், கல்லுாரி கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை சிறுத்தை கட்சியினரை சேர்ந்தவர்கள் ஒட்டி பரபரப்பை கிளப்பினர்.  சர்ச்சைக்குரிய இந்த போஸ்டரை ஒட்டியவர் மயிலம் சட்டசபை தொகுதி செயலர் செல்வசீமான் ஆவார்.  கடந்த ஜூலை 27ம் தேதி, கட்சி கொடி கட்டிய டிராக்டருடன் சென்று, கல்லுாரிக்கு எதிரிலுள்ள காலி இடத்தை உழுது, நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்தினார். 

மயிலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் செய்து, அவர்களை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே தான் திருமாவளவன் படத்துடன், விழுப்புரம் மாவட்டம் முழுதும் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.  இந்நிலையில் செல்வசீமான் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!