தமிழக அரசு இதில் கோட்டை விட்டு விட்டதா? ஈஸ்வரன் கேள்வி!!

By Narendran SFirst Published Aug 9, 2022, 6:45 PM IST
Highlights

சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அதனை குஜராத்தில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலை டாடா நிறுவனம் வாங்கியிருப்பது மத்திய அரசின் நிர்ப்பந்தமா? தமிழக அரசு கோட்டை விட்டு விட்டதா? என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அதனை குஜராத்தில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலை டாடா நிறுவனம் வாங்கியிருப்பது மத்திய அரசின் நிர்ப்பந்தமா? தமிழக அரசு கோட்டை விட்டு விட்டதா? என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் சணந்த் என்ற இடத்தில் மூடப்பட்ட ஃபோர்ட் நிறுவனத்தை 750 கோடி விலை பேசி வாங்கி விட்டதாக இன்று செய்திகள் வந்திருக்கின்றது.

இதையும் படிங்க: இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தி அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களையும் மூடியதை நாம் அறிவோம். அதனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். தமிழகத்தில் சென்னை மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டதால் பல ஆயிரம் பேர் வேலையிழந்தனர். தமிழக அரசின் அழைப்பின் பேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்தித்து சென்னை ஃபோர்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதைப் பற்றி பேசினார்கள்.

இதையும் படிங்க: இந்து கோவில் கோபுரங்களில் தேசிய கொடி.. அமைச்சர் சேகர் பாபுவுக்கு மாஸ் கோரிக்கை வைத்த இந்து மக்கள் கட்சி.

தமிழக அரசின் தரப்பில் என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதெல்லாம் தமிழக அரசின் சார்பில் பேசப்பட்டதாக அறிகிறோம். பல்லாயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் குஜராத்தில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலை டாடா நிறுவனம் திடீரென்று வாங்கியிருக்கிறார்கள் என்றால் நடந்தது என்ன? மத்திய அரசின் நிர்ப்பந்தமா? தமிழக அரசு கோட்டை விட்டு விட்டதா? பல ஆயிரம் தமிழர்கள் வேலையை பாதுகாக்கின்ற முயற்சியில் தோற்றுப் போனோமா? மிக கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!