இந்து கோவில் கோபுரங்களில் தேசிய கொடி.. அமைச்சர் சேகர் பாபுவுக்கு மாஸ் கோரிக்கை வைத்த இந்து தமிழர் கட்சி.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2022, 6:05 PM IST
Highlights

75வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து திருக்கோவில் கோபுரங்கள் மீதும் தேசிய கொடியை பறக்கச் செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

75வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து திருக்கோவில் கோபுரங்கள் மீதும் தேசிய கொடியை பறக்கச் செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- பாரத நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுக்க சிறப்பாக கொண்டாட ஏற்படாகி வருகிறது. 

பாரத சுதந்திரத்திற்கு தமிழகத்தினுடைய பங்கு மிகப் பெரியது. பாரத நாடு சுதந்திரம் அடைவதற்கு போற்றுதலுக்குரிய திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் சார்பில்  தம்பிரான் சுவாமிகள் சைவ நெறி செங்கோல் கொடுத்து "வேயுறுதோளிபங்கன்.....என்றுதொடங்கும் பாடல் தொடங்கி அரசாள்வர் ஆணை நமதே" என்ற பாடல் நிறைவு செய்து, புனித நீர் தெளித்து நந்தி உருவம் பதித்ததங்க முலாம் பூசப்பட்ட சைவநெறி செங்கோல் முதல் பாரத பிரதமர் நேரு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்த் - ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் சந்திப்பு.. கலாய்த்த வைகோ - என்ன இப்படி சொல்லிட்டாரு?

ஆலயம் காப்பதற்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த மாமன்னர் மருது சகோதரர்கள் வீர வரலாறு தமிழகத்தில் நடந்தது. சுதந்திர எழுச்சிக்காக மக்கள் கூடிய கூட்டங்கள் அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆலயங்களும் ஆலய வளாகங்களும் இருந்தது. தெய்வ பக்தியும் தேசபக்தியும் இரண்டற கலந்த இந்த தாய் திருநாட்டின் விடுதலை நாள் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையின் கீழ் இருக்கக்கூடிய அனைத்து திருக்கோயில்களிலும் மங்கள வாத்தியங்களை இசைக்க, ஓதுவார்கள் சைவ திருமுறைப்பாடல்கள் பாடிட திருக்கோயில் கோபுரங்களில் தேசியக் கொடி ஏற்றிட வேண்டும்.

இதையும் படியுங்கள்: பாஜகவில் இணைந்தார் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்… சென்னை பாஜக உறுப்பினர்கள் பலம் 2 ஆக அதிகரிப்பு!!

பாரத அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி மூன்று தினங்கள் திருக்கோயில் கோபுரங்களில் தேசியக்கொடி பறந்திடவும், சுதந்திர தினத்தன்று திருக்கோயில் முன்பாக பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை கொண்டாட தேவையான அரசு உத்தரவை பிறப்பிக்க வேண்டுகிறோம்.திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பு செய்திட வேண்டும். 

மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கிராம கோவில்கள்; சமுதாய கோவில்கள் ; திருமடங்கள் மட்டுமல்லாது அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடிட வேண்டுமாறு அன்பு வேண்டுகோளை இந்து தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம். அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஆன்மீக அன்பர்கள் சிவனடியார்கள் மடாதிபதிகள் மற்றும் பெரியோர்கள் அனைவரும் இதில் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!