அதிமுகவின் முதல் எம்.பி.. எம்ஜிஆரின் படைத்தளபதி மாயத்தேவர் மறைந்தார்..சோகத்தில் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2022, 3:30 PM IST
Highlights

எம்ஜிஆர் கட்சி தொடங்க உறுதுணையாக இருந்தவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கிய உடன் அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் முதல் எம்பி மாயத்தேவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 

எம்ஜிஆர் கட்சி தொடங்க உறுதுணையாக இருந்தவர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய உடன் அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அக்கட்சியின் முதல் எம்பி மாயத்தேவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (88) அவரின் மரணம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 மாயத்தேவர் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இன்று காலமானார். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்பியாக வெற்றி பெற்றவர் ஆவார். திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை துவக்கினார், அக்காட்சி துவங்கப்பட்ட போது எம்ஜிஆருக்கு பாதுகாப்பாகவும் பக்கபலமாக இருந்தவர் மாயத்தேவர். அதிமுக என்ற கட்சி  திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது.

இதையும் படியுங்கள்: தொகுதி தான் என் திருக்கோயில்... ஓட்டு போட்ட மக்கள் தான் என் தெய்வம் ... திராவிட மாடல் துரைமுருகன்.

அத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் மாயத் தேவர் ஆவார். அதிமுகவின் முகமாக உள்ள இரட்டை இலை  சின்ன முதல்முதலில் இத்தேர்தலில் தான் கறமிறக்கப்பட்டது. அதுவரை அந்த தொகுதியில் திமுக மிக பலமாக இருந்து வந்த நிலையில்  அந்த தேர்தலில் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி அதிக வாக்கு வித்தியாசம் வெற்றி பெற்றார் மாயத்தேவர், காமராஜரின் காங்கிரஸ் ஸ்தாபன கட்சி இரண்டாம் இடம் பெற்றது, திமுக அதில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்: இபிஎஸ்க்கு போட்டியாக களமிறங்கும் ஓபிஎஸ்...! வட மாவட்ட நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை

எம்ஜிஆர் என்ற பெயரும் இரட்டை இலை சின்னமும் மாயத்  தேவரின் வெற்றியை இலகுவாக்கியது. அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றார், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள சின்னாளபட்டியில் அவர் உயிரிழந்தார். மாயத்தேவர் வழக்கறிஞராகவும் சில ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார். பிற்காலத்தில் கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்த அவர் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுச் செய்தி அறிந்தவுடன் அமாமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இயக்கம் சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புரட்சித்தலைவரின் முதல் வெற்றி முகமாக வலம் வந்த பெருமைக்குரிய மாயத்தேவர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மாயத் தேவரின் மறைவு செய்தி அதிமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

click me!