தொகுதி தான் என் திருக்கோயில்... ஓட்டு போட்ட மக்கள் தான் என் தெய்வம் ... திராவிட மாடல் துரைமுருகன்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 9, 2022, 3:08 PM IST

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களையும் தொகுதியையும் மதிக்க வேண்டும் என மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொகுதிதான் தனக்கு தாய் விடு என்றும், தொகுதி மக்கள் தான் தனக்கு கடவுள்கள் என்றும் துரைமுருகன் நெகிழ்ச்சி பட கூறியுள்ளார்.


அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களையும் தொகுதியையும் மதிக்க வேண்டும் என மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொகுதிதான் தனக்கு தாய் விடு என்றும், தொகுதி மக்கள் தான் தனக்கு கடவுள்கள் என்றும் துரைமுருகன் நெகிழ்ச்சி பட கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அவை மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது, அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவடைந்து பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசு முடங்கிக் கிடக்கிறது என்றும் விமர்சித்து வருகின்றன. இது ஒருபுறம் உள்ள நிலையில் தமிழக அரசின் திராவிட மாடல் என்ற கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

திராவிட மாடல் என பேசிக்கொண்டே மறுபுறம் பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை வேலையை திமுக அரசு செய்கிறது என நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில் தனது தொகுதியை கோவில் என்றும், வாக்களித்த மக்கள் கடவுள் என்றும் துரைமுருகன் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது சென்னை கிழக்கு மாவட்டம்  வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் சென்னை அயனாவரத்தில் கலைஞர் அரசியல் அரங்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் சாதி மதம் பார்க்கக்கூடிய ஒரு ஊரில் பிறந்து 14 வயதிலேயே ஒரு பத்திரிகையை ஆரம்பித்துள்ளார் என்றால் அதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். 

அதைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், கலைஞர் கருணாநிதி குறித்து தான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும், தன்னைப்போல் அவருடன் இத்தனை ஆண்டுகள் நெருங்கி பழகியவர்கள் எவரும் இல்லை என்றும் கூறினார். ஆனால் அவர் என்னிடம் கூறிய சில அந்தரங்கங்களை கூறியுள்ளார் அதையெல்லாம் எழுத முடியாது என்றும் அவர் தெரிவித்தார், திமுக இயக்கம் வளர வேண்டும், கட்சித் தொண்டர்கள் வளர்ந்து வர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என துரைமுருகன் பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளையும், தொகுதி மக்களையும் மதிக்க வேண்டும் என்றார்.

அடிக்கடி தொகுதிக்கு செல்ல வேண்டும் இதுவரை நான் 12, 13 தடவை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்று இருக்கிறேன் என்றால் அதை நான் தொகுதி என்று சொல்லமாட்டேன் அது எனது திருக்கோயில் என்று தான் சொல்லுவேன். எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் தான் எனக்கு கடவுள், எனது தொகுதிக்கு போவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும், நான் எப்போது போனாலும் இரண்டுபக்கமும் எனது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு மக்களுக்கு கை காட்டியபடி தான் செல்வேன், அவர்கள் பார்த்தாலும் சரி பார்க்காவிட்டாலும் சரி நான் அதை செய்வேன். தொகுதியை மறந்தவர்கள் தனது தாயை மறந்ததற்கு சமம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!