இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

Published : Aug 09, 2022, 06:12 PM IST
இபிஎஸ் சுற்றுப் பயணம்- ஓபிஎஸ் களத்துக்கே வரல, அதுக்குள்ள இப்படியா ? வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

சுருக்கம்

நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வழக்கை உயர் நீதிமன்றதுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இரு வாரங்களில் வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதாக பன்னிர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனை ஏற்று ஏற்கனவே இரண்டு முறை இதுதொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, புதிதாக வழக்கை விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

அதன் அடிப்படையில்  இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்குகள்  இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை நாளை மறுதினம் தள்ளிவைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கொடுத்த பேட்டியில், ‘ஓபிஎஸ் இன்னும் களத்துக்கு வரவே இல்லை. அதற்க்குள் இபிஎஸ் அலையோ, அலை என அலைந்துகொண்டு இருக்கிறார். மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். ஓபிஎஸ் அலை வீசுகிறது என இபிஎஸ் தெரிந்துகொண்டார்’ என்று பேட்டியளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!