TN Local Body Election: எல்லாரும் ராஜினிமா செய்யுங்கள்..கூட்டணி அறத்தினை காத்திடுக.. கொந்தளித்த திருமா..

Published : Mar 04, 2022, 05:40 PM IST
TN Local Body Election: எல்லாரும் ராஜினிமா செய்யுங்கள்..கூட்டணி அறத்தினை காத்திடுக.. கொந்தளித்த திருமா..

சுருக்கம்

கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்'  காத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்று பெற்றுள்ளனர். இந்தச் சூழலில் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து போட்டியிட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருகிறார். 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்'  காத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!