"சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால் அம்மாவும் அதிமுகவும் இருந்திருக்காதே"- வளர்மதி அதிர்ச்சி பேச்சு

First Published Dec 30, 2016, 11:47 AM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக.

சமீபத்திய வழக்கம்போல வானகரம் கல்யாண மண்டபத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டது. இதில், சசிகலா கலந்து கொள்ளவில்லை. அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டனர். அதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதியும் ஒருவர்.

பா.வளர்மதியின் அதிரடி பேச்சை கேட்ட 2,770 பொதுக்குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய்விட்டனர். அப்படி என்னதான் பேசினார் பா.வளர்மதி. அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இதோ…

1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார். அதிமுகவும் இருந்திருக்காது என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதற்கு ஒருபடி மேலே சென்ற பொன்னையன், சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அதிமுக எனும் கட்சிக்கு ஓடாய் உழைத்தது என ஒரே போடாய் போட்டார்.

எம்ஜிஆர் காலகட்டத்தில் அதிமுக வினரால் கொடிக்கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. சின்னம்மா சகோதரர் திவாகரன், அரிவாளுடன் சென்று பல கிராமங்களில் அதிமுக கொடியேற்றினார் என பரபரத்தார்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவை பார்க்கவிடாததற்கு ஒரே காரணம், அம்மாவுக்கு இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பது மட்டுமல்ல, அந்த இன்பெக்ஷ்ன் உங்களுக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்த முடிவை எடுத்ததாக பொன்னையன் அதிரடியாக சரவெடி வெடித்தார்.

பொதுக்குழுவில் அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சை, விலாவரியாக வெளியிட்டுள்ளது பிரபல தமிழ் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்று.

click me!