அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி..! ஸ்டாலினுக்கு நம்பிக்கை கொடுக்கும் வைகோ..!

Published : Mar 01, 2020, 04:54 PM ISTUpdated : Mar 01, 2020, 04:57 PM IST
அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி..! ஸ்டாலினுக்கு நம்பிக்கை கொடுக்கும் வைகோ..!

சுருக்கம்

ஆருயிர்ச் சகோதரர் மு.க.ஸ்டாலின், தி.மு.கழகத்தை எஃகு அரணாகக் கட்டிக்காத்து வருகிறார். அவரது அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில்,"ஆருயிர்ச் சகோதரர் மு.க.ஸ்டாலின், தி.மு.கழகத்தை எஃகு அரணாகக் கட்டிக்காத்து வருகிறார். அவரது அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி செய்யப்பட்டிருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார். அதே போல விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "இன்று பிறந்தநாள் காணும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சமூகநீதியை, ஜனநாயகத்தைக் காக்கும் அறப்போராட்டத்தில் தி.மு.கவுடன் உற்றதுணையாக நிற்போம்" என்று கூறியுள்ளார்.

'கட்சியில மொத்தமே 5 பேர் தான் இருக்காங்களா ஐயா'..? திரௌபதி படம் பார்த்த ராமதாஸை கலாய்த்த திமுக எம்பி..!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ ஸ்டாலின் ஆசிர்வதிக்கப்படுவார் என தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் ஸ்டாலின் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக நடிகர் கமல் தெரிவித்திருக்கிறார்.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..