'மாமனிதர் மோடி'..! அமெரிக்கா சென்றும் பிரதமரை புகழ்ந்து தள்ளும் டிரம்ப்..!

By Manikandan S R SFirst Published Mar 1, 2020, 4:33 PM IST
Highlights

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை மாமனிதர் என புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், தனது இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் கூறினார். 

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். கடந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்த டிரம்ப் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் இரு நாடுகளுக்கிடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருந்தார். அமெரிக்க அதிபரின் இந்திய வருகை உலக நாடுகளை உற்று நோக்க வைத்தது.

இந்தியா வந்திருந்த ட்ரம்ப்பிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் விதமாக "நமஸ்தே ட்ரம்ப்" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து உரை நிகழ்த்தி இருந்தனர். இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை மாமனிதர் என புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், தனது இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் கூறினார்.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

இந்திய மக்கள் தமது பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், அமெரிக்கா மீதும் அமெரிக்க மக்கள் மீதும் இந்தியர்கள் அன்பு கொண்டிருப்பதாகவும் பேசினார். அமெரிக்கா  மக்கள் தொகை 35 கோடி எனவும் அதேநேரத்தில் இந்தியா 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

'கட்சியில மொத்தமே 5 பேர் தான் இருக்காங்களா ஐயா'..? திரௌபதி படம் பார்த்த ராமதாஸை கலாய்த்த திமுக எம்பி..!

click me!