ரியல் ஹீரோ வைகோ தான்...! மருத்துவமனையில் கருணாநிதியை பார்த்து அவர் கூறியது என்ன தெரியுமா..? ஸ்டாலின் உருக்கம்

By Ajmal KhanFirst Published Sep 12, 2022, 8:48 AM IST
Highlights

ரியல் ஹீரோ என்றால் அண்ணன் வைகோதான்| ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ! இலட்சிய ஹீரோ! தியாகத்தால் உருவாகியிருக்கக்கூடிய ஹீரோ! எழுச்சிமிக்க ஹீரோ! உணர்ச்சிமிக்க ஹீரோ! என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட பேசியுள்ளார்.
 

ரியல், கொள்கை ஹீரோ வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியாட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவணப்படத்தை வெளியிட்டு பேசினார். அப்போது, இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்யம் தியேட்டர். சத்யம் சினிமா தியேட்டர். இந்த சத்யம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். பல திரைப்படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு சத்யம் தியேட்டரில் நடைபெறக்கூடிய நிகழ்வில் உண்மையான ஹீரோவை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். "ரியல் ஹீரோ" என்றால் அண்ணன் வைகோதான் திரைப்படத்தில் வருகிற ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கக்கூடிய டைரக்ஷன் செய்து திரைப்படத்துக்காகச் சித்தரிக்கப்படக்கூடிய ஹீரோ ஆனால் சித்தரிக்கப்படாத ஹீரோவாக அண்ணன் வைகோ அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரியல் ஹீரோ மட்டுமல்ல. கொள்கை ஹீரோ! இலட்சிய ஹீரோ! தியாகத்தால் உருவாகியிருக்கக்கூடிய ஹீரோ! எழுச்சிமிக்க ஹீரோ! உணர்ச்சிமிக்க ஹீரோ! ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு போராளி ஹீரோ. 

வைகோவின் பேச்சுக்கு அடிமை

அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல. கொள்கையிலும் உயர்ந்தவர், இலட்சியத்திலும் உயர்ந்தவர். தியாகத்திலும் உயர்ந்திருக்கக்கூடியவர் அண்ணன் வைகோ அவர்கள். அவரை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன், மாணவனாக இருந்தபோது. இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை முதன்முதலில் கோபாலபுரத்தில் தொடங்கியிருந்தபோது, அவரிடத்தில் போய் நான் தேதி வாங்கி, பெரிய பெரிய கூட்டத்தையெல்லாம் நான் நடத்தியிருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் கூட்டம் எங்கு நடந்தாலும், சென்னையில் சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதியில் எங்கு நடந்தாலும், சைக்கிளில் அல்லது ஸ்கூட்டரில் போய், கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கேட்டு இரசித்தவன் நான்.நெருக்கடி நிலைக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் இருந்த பல்வேறு சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அண்ணன் வைகோ அவர்கள் பாளைச் சிறையில் ஓராண்டுகாலம் அவரும் இருந்தார். எத்தனையோ சிறைச்சாலை. அதில் எனக்குப் பசுமையாக, ஆழத்தில் பதிந்திருப்பது, அவர் மிசாவில் கைதாகிப் பாளைச் சிறையில் இருந்தபோது, எனக்குக் கடிதம் எழுதுவார். பாளைச் சிறையில் இருந்து சென்னைச் சிறைக்கு எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்த எல்லாச் சிறைச்சாலைகளுக்கும் கடிதம் எழுதிய ஒரு மனிதர் உண்டென்று சொன்னால் அது அண்ணன் வைகோதான்.

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் ...? கோபமடைந்த செல்லூர் ராஜூ..! போங்கப்பா பேட்டியே வேணாம்...

 சிறையில் இருந்து கையெழுத்திட்டார்

எல்லாரையும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, சிறைவாழ்க்கை என்பது என்று எடுத்துச் சொல்லக்கூடிய வகையில், அந்தக் கடிதத்தைப் படித்து நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தது உண்டு; உணர்ச்சியடைந்தது உண்டு. அவர் பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைப்பட்டிருந்தபோது, அப்போது நாடாளுமன்றத்தினுடைய தேர்தல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி, ஏற்கனவே அமைத்திருக்கிறோம். அப்போது, தலைவர் கலைஞர் அவர்கள் என்னையும் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் அழைத்து, வேலூர் சிறையில் இருக்கக் கூடிய அண்ணன் வைகோ அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வா என்று அனுப்பி வைக்கிறார். சிறையில் போய்ப் பார்த்தோம். சிங்கத்தைக் குகையில் போய்ச் சந்திப்பது என்று சொல்வார்களே, அதுபோல போய்ச் சந்தித்தோம். குகையில் சிங்கம் போல அமர்ந்திருந்தார். அந்த ஒப்பந்தத்தைக் கொடுத்தோம். படித்துக் கூட பார்க்கவில்லை. "கலைஞர் சொல்லிவிட்டார் அல்லவா! கையெழுத்து போடுகிறேன்" என்று சொல்லிப் போட்டுவிட்டார். அதுநாள் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

2000 ஆடு, 5000கோழி தடபுடலாக நடைபெற்ற அமைச்சர் வீட்டு கல்யாண விருந்து.! அதிமுகவினரையே மிஞ்சிய மூர்த்தி

கலைஞரை பார்த்த வைகோ

படக்காட்சியில் வந்தது கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று, அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில், சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் என்னிடத்தில் நொலைபேசியில் தொடர்புகொண்டு, "தலைவரைப் பார்க்கணும், கலைஞரைப் பார்க்கணும்” என்று கேட்டார் உடனே அவரைத் தலைவரிடம் எந்தச் சூழ்நிலையில் பார்க்கவைக்க முடியும் என்று மருத்துவர்களிடம் கலந்துபேசி, அதற்குப் பிறகு அவரிடத்தில் சொல்லி, அவரும், அந்த நேரத்துக்கு வந்தார். அவர் வந்து மாடிப்படியேறி உள்ளே நுழையும்போதே தலைவர் அவர்கள் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனடியாக யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த உடல்நிலை அந்தச் சூழல் அவருக்கு இருக்கு இருந்தாலும், அவர் அந்தக் கருப்புத் துண்டைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுபிடித்துச் சிரித்தார்.  அண்ணன் வைகோவைப் பார்த்து வந்தவுடனே கையை நீட்டினார். அண்ணன் வைகோ அவர்கள் ஓடிவந்து கையைப் பிடித்துக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டார். நான் பக்கத்தில் இருந்து தட்டிக்கொடுத்து, “அண்ணே, அழாதீங்க, சமாதானமா இருங்க" என்று சமாதானப்படுத்தினேன். இன்னும் அந்தக் காட்சி எனக்குப் பசுமையா இருக்கு அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அதற்குப் பிறகு திருச்சியில் ம.தி.மு.க.வைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டு விழா அண்ணன் வைகோ அவர்கள் என்னை அழைத்திருந்தார். நான் போயிருந்தேன். 

தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம்

அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது சொன்னேன். அண்ணன் வைகோ அவர்கள் சமீபத்தில் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திந்து, தலைவர் கையைப் பிடித்துக்கொண்டு, “அண்ணே கவலைப்படாதீங்க, உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாகப் பல ஆ ஆண்டுகாலம் இருந்தேனோ, அப்படி தம்பி ஸ்டாலினுக்கு இருப்பேன்” என்றுசொன்னதைத்தான் திருச்சியில் பேசும்போது சொன்னேன் சொல்லிவிட்டு,“அண்ணே நீங்கள் எப்படி எனக்குத் துணையிருப்பேன் என்று சொன்னீர்களோ, அதுபோல நாள் உங்களுக்கு எப்போதும் துணையிருப்பேன்" என்று சொன்னேன். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவேண்டும் என்று விரும்பினாரோ இல்லையோ அது எனக்குத் தெரியாது. ஆனால் கூட்டணி அமைத்த நேரத்தில், இடங்கள் எல்லாம் ஒதுக்கீடு செய்த நேரத்தில், நான் அவரிடத்தில் உரிமையோடு சொன்னேன். "அண்ணே உங்கள் உடல்நலன் எனக்கு முக்கியம் எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கு முக்கியம் அதுமட்டுமல்ல, நீங்கள் ஓரிடத்தில் சென்று நின்று. அங்கே வேட்பாளராக நின்றுவிட்டால், தமிழ்நாடு முழுவதும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்யமுடியாது ஆனால் மாநிலங்களவையில் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். 

மாநிலங்களவை எம்பியாக வைகோ

தேர்தல் முடிவு எப்படி வருகிறதோ நமக்குத் தெரியாது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் என்பது முடிவான முடிவு அதனால் வெற்றி பெறுகிறோயோ இல்லையோ, நீங்கள் மாநிலங்களவைக்குப் போகப் போகிறீர்கள். அதனால் நிச்சயமாக, உறுதியாக என்னுடைய கருத்தை தயவுசெய்து ஏற்றுக்கொண்டு, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்கு மூன்று முறை மாநிலங்களவையில் இடம்கொடுத்து உங்கள் குரலை ஒலிர்சு வைத்தாரோ. அதுமாதிரி நானும் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி அவரிடத்தில் கேட்டேன். என்னுடைய ஆசையை ஏற்றுக்கொண்ட அவருக்கு அப்போது நன்றி சொன்னேனோ இல்லையோ, இப்போது உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றியை இதயப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலக வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் கோட்டாட்சியர் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

 

click me!