குஜராத், கர்நாடகாவை கம்பேர் பண்ணும் போது தமிழகத்தில் மின் கட்டணம் கம்மிதான்... அமைச்சர் செந்தில் பாலாஜி.!

By vinoth kumarFirst Published Sep 12, 2022, 6:37 AM IST
Highlights

தமிழகத்தில் 100 யூனிட்க்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோர் 1 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமாகும்.

தமிழகத்தில் 100 யூனிட்க்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோர் 1 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக மின்வாரியம் கடந்த 10  ஆண்டுகளாக ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருந்து வந்தது.   மேலும் ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில்  உள்ளது. இந்நிலையில் மத்திய அரசும் ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையமும்   நிதி நிறுவனங்களும் தமிழக அரசுக்கு மின் கட்டணத்தை உயர்த்த நிர்ப்பந்தமும் பலமுறை கடிதங்கள் அனுப்பியது.

இதையும் படிங்க;- கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு.. ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சி தாக்கு

தமிழகத்தில் 100 யூனிட்க்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோர் 1 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமாகும்.

201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 82 ஆயிரம் பேர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் குறைந்த கட்டணங்கள் மட்டுமே உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டு உபயோக மின் நுகர்வோரை பொறுத்தவரை குஜராத், கர்நாடகாவைவிட மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு தான். தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால் தான் புதிய தொழிற்சாலைகளை இங்கு துவங்க போட்டி போட்டு வருகிறார்கள்.  பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டணங்களில் வந்துவிடக்கூடாது என்பதற்காக மின்வாரியம் இந்த நடவடிக்கை எடுத்து மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

click me!