மக்களை அச்சுறுத்துனா நடக்குறதே வேற.. அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை..!

First Published Oct 29, 2017, 1:47 PM IST
Highlights
uthayakumar warns rumour spreading people


மக்களை அச்சுறுத்தும் வகையிலோ குழப்பும் வகையிலோ கருத்து தெரிவிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: 

வெள்ளத்தில் சென்னை சிக்கும் என கமல் வதந்தி பரப்பி வருகிறார். அரசியல் ஆசையில் இருக்கும் கமலுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
எண்ணூர் கழிமுகத்தில் கமல் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை. சொந்த நலன் தான் உள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையிலோ, குழப்புகின்ற வகையிலோ யார் எந்தவிதமான கருத்துகளை கூறினால், அதற்கூரிய சட்ட ரீதியான நடவடிக்கையைதமிழக அரசு மேற்கொள்ளும். வதந்திகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். 

ஏதாவது ஒரு குழப்பம் நடந்தால், குட்டையில் மீன்பிடிக்கலாம் என கமல்ஹாசன் முயற்சி மேற்கொண்டுள்ளார். நிச்சயம் கமல் கனவு பலிக்காது. 

பசும்பொன் பூஜைக்காக தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து செல்வதை தினகரன் அரசியலாக்கிவிட்டார். ஆட்சி கலையும் என தினகரன் கூறுவது ஒரு போதும்நடக்காது. கடந்த மூன்று மாதங்களாக தினகரன் கூறுவது எதுவுமே நடக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் உதயகுமார் பேசினார்.
 

click me!