1.76 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றபோது வராத ஒன்றிய அரசா.. இப்போது காப்பாற்றும்.. வெளுத்து வாங்கும் வேல்முருகன்.!

By vinoth kumarFirst Published Oct 8, 2022, 9:49 AM IST
Highlights

ஒன்றியத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அவர்கள், சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பார்களே தவிர, மறந்தும் கூட தமிழர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

ஒன்றியத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அவர்கள், சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பார்களே தவிர, மறந்தும் கூட தமிழர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என வேல்முருகன் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள், சிங்களப் பேரின வாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் அறியும்.

இதையும் படிங்க;- தமிழர்களுக்கு பாஜக பச்சை துரோகம்.. இலங்கைக்கு இந்தியா எவ்வளவு ஜால்ரா போட்டாலும் வேஸ்ட் .. பழ.நெடுமாறன்.

இந்நிலையில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அவையின் 51ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை,  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை,  ஒன்றிய அரசு வழக்கம் போல் புறக்கணித்துள்ளது. இதற்கான பொருள் என்னவென்றால், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு பக்க பலமாக, இந்திய ஒன்றிய அரசு துணை நிற்கும் என்பது தான்.  

 கடந்த1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை, சிங்களத்தில்  ஈழத்தமிழின அழிப்பை தனது அரசகொள்கையாக முன்னெடுத்து, மனித உரிமைகள் வன்முறைகள், போர் குற்றச் செயல்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தபோது, இந்தியா ஒன்றிய அரசு, உரிய நேரத்தில் அதனைத் தடுக்கத் தவறியதன் விளைவாக, 1,76,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரை இனஅழிப்புக்குள்ளாகினர். அப்போது வராத ஒன்றிய அரசா, ஈழத்தமிழர்களை இப்போது காப்பாற்ற போகிறது?. ஈழத்தமிழர்களின் தாயகத்தின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து ஒழிப்பதையே இன்றுவரை தங்கள் அரசியல் கொள்கையாகத் தொடர்கிறது. ஆக, ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்களுக்கு, எப்போதும் இந்திய ஒன்றிய அரசு துணை நிற்காது.  

இதையும் படிங்க;- 41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் என்பது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்பே கணித்தது தான். இந்திய ஒன்றிய அரசின் இந்த நிலைபாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார். 

click me!