இந்து மக்களை பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு அஞ்ச மாட்டோம்.. பாஜக மாவட்ட தலைவர் ஆவேசம்.!

Published : Oct 08, 2022, 09:02 AM ISTUpdated : Oct 08, 2022, 09:08 AM IST
இந்து மக்களை பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு அஞ்ச மாட்டோம்.. பாஜக மாவட்ட தலைவர் ஆவேசம்.!

சுருக்கம்

நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளுகின்ற புனிதமான இயக்கத்தை சார்ந்த காரிய கருத்தர்கள் என்கிற அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம். அந்தப் பொறுப்பை என்று துறந்து நான் இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்கள் உடலில் இருக்காது வெட்டி விடுவோம்.

அரசியல் நாடகம் ஆடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதுபோக நாங்கள் பிறந்த மதத்தை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார். 

மதுரை மாவட்ட பாஜகவினர் சார்பாக இல.கணேசன் பூரண நலம் பெற மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள ஆதி மகாமுனி சிவாலயத்தில் சிறப்பு ஆயில் ஹோமம் பாஜக மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க;- இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகா சுசீந்திரன்;- பாஜக மூத்த தலைவரும், மேகாலயா ஆளுநருமான இல.கணேசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் பூரண நலம் பெற்று வருவதற்கு ஆதி சிவன் கோவிலில் மதுரை மாவட்ட பாஜக சார்பாக ஹோமம் வளர்க்கப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. அவர் பூரண குணமடைந்து தொடர்ந்து இந்த தேசத்திற்கு வழிகாட்ட வேண்டும்.

திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றோர்கள் கைலாச நாடு தொடங்கிய நித்தியானந்தாவை போல அவர்களும் ஒரு நாட்டை தொடங்கி இந்த கருத்துக்களை சொன்னால் நல்லது. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். சத்ரபதி சிவாஜி, சின்ன மருது பெரிய மருது வாரிசுகள் நாங்கள். தன் சுயலாபத்துக்காக, சுய விளம்பரத்திற்காக இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு யார் பாடம் புகட்டுகிரார்களோ தெரியாது, மதுரையில் இருந்து நாங்கள் பாடம் புகட்டுவோம். நான் ஒரு இந்தியன், இந்து என்கிற அடிப்படையில் பாடம் புகட்டும் காலம் மதுரையில் இருக்கும். 

அரசியல் நாடகம் ஆடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதுபோக நாங்கள் பிறந்த மதத்தை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளுகின்ற புனிதமான இயக்கத்தை சார்ந்த காரிய கருத்தர்கள் என்கிற அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம். அந்தப் பொறுப்பை என்று துறந்து நான் இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்கள் உடலில் இருக்காது வெட்டி விடுவோம். இதற்காக பல வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என மகா சுசீந்திரன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

இதையும் படிங்க;-  வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து..!கமல்ஹாசனின் கருத்து 100க்கு 100 சரியானது..! கி.வீரமணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!
Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!