அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.. புகழேந்தி..!

Published : Oct 08, 2022, 06:41 AM ISTUpdated : Oct 08, 2022, 06:44 AM IST
அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.. புகழேந்தி..!

சுருக்கம்

தேவர் ஜெயந்தி அன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய ஓபிஎஸ்க்கு தான் தகுதி உண்டு, எடப்பாடி பழனிசாமிக்கும் தேவருக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினார். சாதி என்ற போர்வையில் ஆர்.பி.உதயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருகின்றனர். 

கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே ஓபிஎஸ் உடனான இணைப்புக்கு வாய்ப்பில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார் என புகழேந்தி கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி;- அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் இபிஎஸ் ஆதரவாளர் உட்பட எல்லோரும் விரும்பினார்கள். ஆனால், கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே நூறு சதவீதம் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என இபிஎஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! யார் யாருக்கு எந்த பதவி..? அதிர்ச்சியில் இபிஎஸ்

இபிஎஸ் தொடர்ந்து தோல்விகளையே பெற்று வருகிறார். சுய லாபத்திற்காக, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று இபிஎஸ் கூறுகிறார். இபிஎஸ்யின் முடிவு குறித்து ஓபிஎஸ் வருத்தப்பட்டார். அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகார போக்குடன் இந்த முடிவு எடுத்துள்ளார்.

தேவர் ஜெயந்தி அன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய ஓபிஎஸ்க்கு தான் தகுதி உண்டு, எடப்பாடி பழனிசாமிக்கும் தேவருக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினார். சாதி என்ற போர்வையில் ஆர்.பி.உதயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருகின்றனர். அதிமுக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி இல்லாத கட்சியாக அதிமுகவை வழிநடத்தினர். எடப்பாடி பழனிசாமி ஒரு போதும் பொதுச்செயலாளராக முடியாது என புகழேந்தி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!