துப்பாக்கி: அவர்கள் பயங்கரவாதத்திற்காக வைத்துள்ளார்கள். நாங்கள் பாதுகாப்புக்காக வைத்துள்ளோம்.. வானதி சீனிவாசன்

Published : Oct 08, 2022, 09:45 AM IST
துப்பாக்கி: அவர்கள் பயங்கரவாதத்திற்காக வைத்துள்ளார்கள். நாங்கள் பாதுகாப்புக்காக வைத்துள்ளோம்.. வானதி சீனிவாசன்

சுருக்கம்

துப்பாக்கியை பாஜகவினர் பாதுகாப்புக்காக வைத்திருப்பதாகவும், ஆனால் மற்றவர்கள் அதை பயங்கரவாதத்திற்காக பயன்படுத்துவதாகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

துப்பாக்கியை பாஜகவினர் பாதுகாப்புக்காக வைத்திருப்பதாகவும், ஆனால் மற்றவர்கள் அதை பயங்கரவாதத்திற்காக பயன்படுத்துவதாகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இந்து அமைப்பினர் துப்பாக்கிகளை ஆயுத பூஜையில் வைத்து பூஜை செய்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு மாற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது  என தனியார் ஊடகம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். அதில் ஒரு சில பதில்கள் பின்வருமாறு:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு  சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு,  எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பையும் ஆதாரமில்லாமல் தடைசெய்ய முடியாது.

இதையும் படியுங்கள்: இந்து மக்களை பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு அஞ்ச மாட்டோம்.. பாஜக மாவட்ட தலைவர் ஆவேசம்.!

மத்திய அரசு ஒரு அமைப்பை தடை செய்கிறது என்றால் நிச்சயம் அந்த அமைப்பு நீதிமன்றத்தை நாடி செல்லும், வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது உரிய நேரத்தில் அதற்கான ஆதாரங்களையும் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டுவதற்கு உரிமைகள் உள்ளது. ஆனால் அது அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அது அனைத்துக்கும் சரியான காரணங்கள் தேவை. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: தமிழர்களுக்கு பாஜக பச்சை துரோகம்.. இலங்கைக்கு இந்தியா எவ்வளவு ஜால்ரா போட்டாலும் வேஸ்ட் .. பழ.நெடுமாறன்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆயுதங்கள் வைத்திருந்ததும் தடைசெய்யப்பட்டதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது,  ஆனால் பல இந்து அமைப்பினர் ஆயுத பூஜையில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து பூஜை செய்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு, ஆயுதங்களை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், ஆயுத பூஜையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது, அவர்கள் துப்பாக்கியை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துகிறார்கள், ஆனால் எங்களுக்கு அரசு அதை பாதுகாப்புக்காக வழங்கியிருக்கிறது. பாதுகாப்பிற்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் அதில் என்ன பிரச்சனை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!