தமிழ்நாடு முழுவதும் புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது திமுக.
திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரால் உற்றுநோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளராக தொடர்ந்து 4 ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின்… pic.twitter.com/8LOmB7NZYh
— Udhay (@Udhaystalin)பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து திமுக தலைவர் முக ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!