உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சைக்கு சென்றபோதுதான் அவர்கள் பிளவை ஏற்படுத்த திட்டம் போட்டனர் என்று சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியை உடைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து பாஜகவுடன் சேர்ந்து முதல்வராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே. அடுத்த கட்டமாக கட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இ ந் நிலையில் உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவருமான ஆதித்ய தாக்கரே மகாராஷ்டிராவில் 'சிவ் சன்வாத்' என்ற யாத்திரையை தொடங்கியுள்ளார். அந்த யாத்திரையின் ஒரு பகுத்யாக தானே மாவட்டத்தில் தொண்டர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அதிருப்தி அணியினர் யாரும் சிவசேனாவுக்கோ உத்தவ் தாக்கரேவுக்கோ துரோகம் செய்யவில்லை.
இதையும் படிங்க: 2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி
மகாராஷ்டிராவில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட அவர்களுக்குத் துணிச்சல் இல்லை. எனவேதான் அவர்கள் சூரத், கவுகாத்தி, கோவா சென்றனர். அஸ்ஸாமில் வெள்ளத்தில் தத்தளித்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அங்கு தங்க வைத்து மகிழ்ச்சிப்படுத்தி கொண்டிருந்தனர். என்னுடைய தந்தை உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்ததால் கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கவில்லை. ஆனால், அவர் முதல்வர் பணியை நிறுத்தவில்லை. தொடர்ந்து உழைத்து கொண்டுதான் இருந்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனில் அவர்கள் சென்றுவிடுவார்கள் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
இதையும் படிங்க: modi: சுதந்திர தினத்தின்போது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
அரசியல் செய்யாதது மட்டும்தான் நாங்கள் செய்த தவறு. அதிருப்தி அணியினர் தற்போது அவர்களின் பலத்தை காட்டுகிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதும் அமைதியாக இருந்தனர். உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சைக்கு சென்றபோதுதான் அவர்கள் பிளவை ஏற்படுத்த திட்டம் போட்டனர். துரோகிகளுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை. நாசிக் மாவட்டத்த்தில் மகா விகாஸ் அகாடி அரசு என்ன செய்தது என்பதை மக்களுக்கு சொல்வோம். விலகி செல்ல விரும்பியவர்கள் சென்றுவிட்டார்கள். ஆனாலும் காவி கொடி இங்கு பறந்து கொண்டு இருக்கிறது. சிவசேனா ஒருநாளும் அரசியல் எதிரிகளை அழிக்க நினைத்தது கிடையாது. ஆனால் அவர்களுடன் (பாஜக) சேர்ந்து நம்முடைய ஆட்களே நம் கட்சியை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.” என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.
இதையும் படிங்க: தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!