நீட் தேர்வு இனி நடக்காது.. எப்படி தெரியுமா ? அமைச்சர் மா.சு சொன்ன ரகசியம்

Published : Jul 22, 2022, 09:43 PM IST
நீட் தேர்வு இனி நடக்காது.. எப்படி தெரியுமா ? அமைச்சர் மா.சு சொன்ன ரகசியம்

சுருக்கம்

நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு  மக்களவையில் தெரிவித்து இருந்தது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இதை குடியரசுத் தலைவிரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்து உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு  மக்களவையில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதா அனுப்பப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

இதை மறு பரிசீலனை செய்ய ஆளுநர் கூறியதை அடுத்து மீண்டும் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் கருத்துகளை கூறியுள்ளது. அதன்படி நீட் விலக்கு சட்ட மசோதா மாநில அரசின் அதிகாரத்திற்கு மீறியதாக உள்ளதா என ஒன்றிய சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியது. 

இதற்கு தமிழ்நாடு அரசு, மாநில அரசுக்கு இதனை நிறைவேற்ற போதுமான அதிகாரம் உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக எடுத்து கூறியுள்ளது. ஒன்றிய அமைச்சகத்தின் கேள்வி அடிப்படையில்லாதது என்று பதிலளித்துள்ளோம். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு தான் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என பதில் அனுப்பி இருக்கிறோம். நீட் விலக்கு மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14ஐ மீறுகிறது என்ற ஒன்றிய அரசின் வாதம் தவறானது. 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!

இந்த மசோதாவின் மூலம் சமவாய்ப்பு அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ சேர்க்கையின் போது வழங்கப்படுகிறது என மாநில அரசு பதில் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் 6  கேள்விகளுக்கு சட்டபூர்வமாக தமிழ்நாடு அரசு பதில் தயாரித்து இருக்கிறது. இதனை ஒரு சில நாட்களில் பதிலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, நீட் விலக்கு மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்த இருக்கிறோம். 

ஒன்றிய அரசின் கேள்விகள், ஜூலை 5ஆம் தேதி தமிழக சட்ட அமைச்சகத்திற்கு வந்தது. சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெற்று பதிலை தயாரித்துள்ளோம். சில தினங்களில் இந்த பதிலை மீண்டும் ஆலோசித்து ஒன்றிய அமைச்சகத்திற்கு அனுப்ப இருக்கிறோம். புதிதாக பொறுப்பு ஏற்கவுள்ள குடியரசு தலைவர் அடுத்தட்டு மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?