முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன் நடத்தப்படுகிறது என்பது தொடர்பாக சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கடந்த ஓராண்டாகவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து சோதனைகலை நடத்தி வருகிறார்கள். எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், வீரமணி. எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடந்த ஆண்டில் சோதனைகளை எதிர்க்கொண்டனர். இந்நிலையில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சோதனைகளை நடத்தினர். இதனால், ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு ஆளான மாஜி அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் மீண்டும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டு..!இபிஎஸ்க்கு செக் வைக்கும் பாஜக...! மோடியிடம் சரணடைகிறாரா எடப்பாடி?-ஜெகதீஸ்வரன்
ஊழல் புகார் தொடர்பாக எப்.ஐ.ஆர். மட்டும் பதிவு செய்து சோதனைகள் மட்டுமே நடக்கும் நிலையில், மாஜி அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற புகாரும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது. ஆனால், திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தற்போது மாஜி அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனைகள் நடைபெற்ற நிலையில், இந்தச் சோதனைகள் ஏன் நடத்தப்படுகிறது என்பது தொடர்பாக சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கியுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகரும் எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.
இதையும் படிங்க: இலங்கை நிலைமை இந்தியாவிலும் வரக் கூடாது.. ஜி.எஸ்.டி. வரியை ரத்து பண்ணுங்க.. விஜயகாந்த் எச்சரிக்கை!
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது எந்த விதமான கட்டணத்தையும் அதிமுக அரசு உயர்த்தவில்லை. ஆனால், தற்போது திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்தக் கோபத்தை காட்டும் வகையில் அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தி வருகிறது” என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !