ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

Published : Jul 22, 2022, 07:23 PM IST
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

சுருக்கம்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியதாக இபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி இருந்தது. முதலில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கட்சியிலிருந்து அன்றே நீக்கப்பட்டனர். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு ஓபிஎஸ் மகன், ரவீந்திரநாத் மற்றும் பலரை நீக்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். இந்நிலையில், தற்போது மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை கட்சி ரீதியாக மக்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என கண்டனங்களை சசிகலா தெரிவித்து, ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.   

மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.இ.அ.தி.மு.க.வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு பேரியக்கம். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் வகையில், இந்த இயக்கத்தைத் தனித்துவத்தோடு செயல்பட வைத்தார்கள். 

ஜெயலலிதா நம்மையெல்லாம் விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.  ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால், இன்றைக்கு அதன் சிறப்பு குறைந்து வருகிறது. கட்சி தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே மிகப்பெரிய தோல்வியை இயக்கம் அடைந்தது. 

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

தோல்வி எதனால் அடைந்தோம் என்று சிந்தித்துப் பார்த்திருந்தால் அடுத்து நடைபெற்ற தேர்தல்களிலாவது வென்று இருக்க முடியும். அதுவும் நடக்கவில்லை; இயக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.  இதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், கட்சித் தொண்டர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. 

தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து ஒரு சிலரின் செயலால் இயக்கம் அழிவை நோக்கி செல்வதாக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு சிலருக்கு தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம். பொய்யான வாக்குறுதி, நம்பிக்கையை விதைத்து ஏமாற்றிக் கொண்டனர். தனது சொந்த கட்சியினரையும், கூட்டணி அமைத்த மாற்றுக் கட்சியினரையும் நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!