
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலையில் அந்த முகாமினை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார். பிறகு மலைவாழ் மக்கள் குடியிருந்து வரும் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு குடும்பத்தினருடன் பாரம்பரிய உணவு வகைகளான களி, சிவப்பு அரிசி சாதம் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?
அவருடன் அந்த முகாமில் கொல்லிமலை நிர்வாகிகள் உட்பட மாவட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
அதில், ‘தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது திமுக அரசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!